கரீனா கபூர் தனது கடுமையான டயட்டை மீறி நொறுக்குத் தீணியை சாப்பிட்டதுதான் இன்றைய இன்ஸ்டாகிராம் சென்சேஷனாக உள்ளது.


கரீனா கபூர், இந்திய மாடல் மற்றும் திரையுலகம் சைஸ் ஜீரோ என்ற உடலளவை முதன்முதலில் அறியச் செய்து அனைவரையும் வாய்பிளக்க வைத்தவர்.


அன்றிலிருந்தே, கரீனா கபூர் என்றால் கட்டுக்கோப்பான உடல் என்றே அர்த்தமாகிவிட்டது. பிரபல டயட்டீசியன் ருஜுதா திவேகர் தான் கரீனா கபூருக்கு காலங்காலமாக டயட் கற்பித்து வந்தவர். கரீனாவின் டயட் ப்ளான் அவ்வளவு பக்கா, ஆனால் நீங்களும், நானும் அவ்வளவு எளிதாகப் பின்பற்றிவிட முடியாது. ஒரே ஒரு பூரி மட்டும் அதுவும் மாதத்தில் ஒருநாள் தான் சாப்பிடலாம் என்றால் ஒப்புக் கொள்வீர்களா? இடைப்பட்ட நேர பசிக்கு எண்ணி 10 வேர்க்கடலை என்றால் ஏற்றுக் கொள்வீர்களா? ஆனால் கரீனா செய்வார், செய்கிறார். எதுவும் எளிதாகக் கிடைக்காது என்பதற்கு கரீனாவின் தவம் போன்ற டயட்டும் ஒரு உதாரணம் தான்.




சரி எதற்கு இத்தனைப் பீடிகை என்கிறீர்களா? டயட்டுக்கு சமபதமான கரீனா கபூர், இந்தப் புத்தாண்டின் முதல் திங்களில் டயட்டை மீறியுள்ளார்.


நம்ப முடியவில்லை என்கிறீர்களா? இன்ஸ்டாகிராம் புகைப்படமே இருக்கிறது. அதுவும் அவரே ஷேர் செய்தது.


அப்படி என்னதான் சாப்பிட்டார் பெபோ?


பெபோ என்று செல்லமாக அழைக்கப்படும் கரீனா கபூர், நியூஇயர் முதல் திங்களில் க்ராய்ஸன்ட் எனப்படும் ஸ்நாக் வகை உணவையே உட்கொண்டுள்ளார். அதைப் பற்றி அவர், இந்த ஆண்டின் முதல் திங்கள் கிழமை. ஆரோக்கிய உணவை உட்கொள்ள வேண்டிய நாள். ஆனால், க்ராய்ஸன்ட் அதை சாப்பிடாமல் கட்டுப்படுத்த முடியவில்லை. உங்கள் மனம் விரும்புவதைச் செய்யுங்கள். இது 2022 ஆம் ஆண்டு. இந்த ஆண்டை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.






சினிமாவுக்கு முழுக்கா?


ஒரு போதும் தனது டயட்டில் இருந்து சற்றும் விலகாத கரீனா கபூர், மனம் விரும்பியதைச் செய்யுங்கள் என்று கூறியுள்ளதால் அவர் ஒருவேளை சினிமாவுக்கே முழுக்கு போடப்போகிறாரோ என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 2000 ஆம் ஆண்டில் அகதி என்ற இந்தித் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்திற்காக ஃபிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகை விருது பெற்றார்.





2001ல் அசோகா என்ற சரித்திரப் படத்தில் கவுர்வகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதில் அவர் கண்களுக்கு அடர்த்தியா மை தீட்டி வரும் தோற்றம் இளைஞர்களை சுண்டி இழுத்தது. இப்போது வரை ஐகானிக் காஜல் விளம்பரத்துக்கு கரீனா நாடப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம். கடைசியாக அவர் கடந்த ஆண்டு அங்கிரேஸி மீடியம் என்ற படத்தில் தான் நடித்தார். அதன் பின்னர் அவர் நடிப்பில் படம் வெளியாகவில்லை. 1980 ஆம் ஆண்டு பிறந்தவர் கரீனா. புகழ்பெற்ற கபூர் குடும்பத்தின் வாரிசு. வாழ்க்கைத் துணை நவாப் குடும்ப வாரிசு. பட்டோடி அலி கான், ஷபானா ஆஸ்மியின் மகன் ஷேய்ஃப் அலி கான். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 20 ஆண்டுகள் நடிப்புப் பயணத்தை வெற்றிகரமாக கடந்துள்ள கரீனாவுக்கு இன்னும் கிரேஸ் இருக்கிறது என்பது மறுக்கமுடியாதது.