ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 முதல் நாள் கலெக்ஷன் ரூ.60 கோடி வசூலித்து பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்தை விட பெரிய அளவில் இந்த படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் முதல் நாள் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் அனைவரையும் மிரள வைத்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு, 'காந்தாரா' படத்தின் அடுத்த பாகம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகம் வெறும் ரூ.15-20 கோடியில் தயாரிக்கப்பட்டது, ஆனால் அது ரூ. 400 கோடி வரை வசூலித்தது. இப்போது, 2-ம் பாகத்திற்கு ரூ. 125 கோடி வரை செலவிட்டதாகத் தெரிகிறது.
இந்தப் படத்தின் சம்பளத்தைப் பொறுத்தவரை, முதல் பாகத்தில் நாயகனாகவும் இயக்குனராகவும் நடித்த ரிஷப் ஷெட்டி ரூ.4 கோடி மட்டுமே வாங்கியதாகக் கூறப்பட்டது. இந்த முறை, லாபத்தில் ஒரு பங்கை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரிஷப் ஷெட்டியுடன், ருக்மிணி வசந்த், ஜெயராம், மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தனர். அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.2 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக பேச்சு உள்ளது.
சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்த படமான 'காந்தாரா சாப்டர் 1' ரிலீசை உற்சாகமாக அனைவரும் வரவேற்றனர். காரணம் 2022-ல் வெளியான 'காந்தாரா' திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரிஷப் ஷெட்டியை அண்ணாந்து பார்க்க வைத்தது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் முன்கதையாக காந்தாரா சாப்டர் 1 வந்துள்ளது. படம் தொடங்கிய காலத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்தது. படப்பிடிப்பு மேலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காந்தாரா சாப்டர் 1 படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் சுமார் 125 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இந்தியாவில் மொத்தம் 6500 திரைகளில் சுமார் 12,511க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில், அமெரிக்காவில் மட்டும் இப்படம் சுமார் 4.20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 30 நாடுகளில் படம் வெளியாகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் முதல் நாள் வசூல் சுமார் 10 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிளாக்பஸ்டர் தொடக்கத்தைக் கண்ட இப்படத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் இதுவரை விற்பனையாகியுள்ளன, வியாழக்கிழமை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 60,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்நிலையில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளே இந்தியாவில் மட்டும் ரூ.60 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அதிகபட்சமாக இப்படத்தின் இந்தி வெர்ஷன் ரூ.19.5 கோடியும், கன்னட வெர்ஷன் ரூ.18 கோடியும், தெலுங்கு வெர்ஷன் ரூ.12.5 கோடியும், தமிழ் வெர்ஷன் ரூ.5.25 கோடியும், மலையாள வெர்ஷன் ரூ.4.75 கோடியும் வசூலித்து இருக்கிறது. இப்படம் உலகளவில் ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
காந்தாரா படத்தின் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு ரிலீஸ் ஆனபோது முதல்நாளில் வெறும் 6 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. ஆனால் அதன் இரண்டாம் பாகம் தற்போது அதைவிட 10 மடங்கு கூடுதலாக வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், இப்படம் வசூலில் மேலும் பல சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு 1000 கோடி வசூல் செய்த முதல் படமாக காந்தாரா சாப்டர் 1 அமைய வாய்ப்பு உள்ளது. இதற்கு முன் கன்னட திரையுலகில் 1000 கோடி வசூல் அள்ளிய ஒரே படம் கேஜிஎஃப் 2 என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்தின் வசூலையும் பின்னுக்கு தள்ளியுள்ளது. வரும் நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.