திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டி ஊராட்சி தனுஷ்கோடி காலனியில் திருமண பந்தத்தை மீறிய தகாத உறவினால் வீடு புகுந்து வெட்டியதில் ஸ்டாலின் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஐந்து பேரை ஒரு மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டி ஊராட்சி தனிஷ்கோடி காலனியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் செந்தமிழ் செல்வன். அவருக்கு சௌமியா என்ற மனைவியும் மூன்று வயது மகளும் உள்ளார். இவர் அப்பகுதியில் மர சாமான்கள் பிளைவுட் தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் பெரியசாமி என்பவர் தனது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்துள்ளார். இதில் பெரியசாமி கூலி வேலையும் மூத்த மகன் ஸ்டாலின் டாட்டா ஏசி வாகனம் ஓட்டியும் மீன்பிடிக்கும் வேலையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அருகில் வீட்டில் இருக்கும் செந்தமிழ் செல்வன் மனைவி சௌமியாவுக்கும் ஸ்டாலினுக்கும் தகாத உறவு இருந்ததாகவும் அதனை செந்தமிழ்ச்செல்வன் பலமுறை கண்டித்தும் கைவிடாததால் ஸ்டாலினை எச்சரித்து உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சௌமியா செல்போனில் வாழ்த்து குறுந்தகவல் தெரிவித்துள்ளார் எனவும் இதனை அறிந்த செந்தமிழ் செல்வன் சௌமியாவை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்டாலின் வீட்டில் சகோதரர் மற்றும் தந்தையுடன் படுத்துக் கொண்டிருக்கிற தகவலை அறிந்த செந்தமிழ் செல்வன் அவரது மைத்துனர் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மதன குமார் அவரது நண்பர்கள் பாலமுருகன் பிரகாஷ் மற்றும் அவரது சித்தப்பா காந்தியுடன் செந்தமிழ் செல்வன் வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் ஸ்டாலினுக்கு பலத்த வெட்டு காயங்களும் அதை தடுக்க வந்த அவரது தந்தை பெரியசாமிக்கு முதுகு மற்றும் தொடை உள்ளிட்ட பகுதியில் கத்திக் குத்துகளும் அவரது தம்பி வெங்கடேஷ்க்கு வெட்டு காயங்களும் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது செந்தமிழ் செல்வன் உட்பட அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து பார்க்கும்பொழுது ஸ்டாலினும் தந்தையும் விட்டு காயங்களுடன் இருந்துள்ளார்கள். அவர்களை உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் ஸ்டாலினை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் பலத்த காயமடைந்த அவருடைய தந்தை பெரியசாமி மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவல் தெரிந்த ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் தங்கராசு தலைமையிலான அம்பிளிக்கை காவல்துறையினர் அப்பகுதி காட்டுக்குள் சுற்றித்திரிந்த வாலிபர்களை பிடித்து விசாரித்ததில் அப்பகுதியில் கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி வந்ததை ஒப்புக்கொண்டதன் பேரில் அவர்கள் 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்திய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.