ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை முடித்துவிட்டதாகவும் படப்பிடிப்பு இந்த ஆண்டில் தொடங்கப்படலாம் எனவுன் படக்குழு சார்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலைக் கேட்ட ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளார்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் தேதி வெளியான கன்னட மொழித் திரைப்படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இந்தப் படத்தை இயக்கி நடித்திருந்தார். காந்தாரா திரைப்படம் வெளியான சில நாட்களில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதன் காரணத்தால் அது இந்தி , தமிழ் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. வெறும் 16 கோடி செலவில் எடுக்கப் பட்ட இந்தத் திரைப்படம் இந்தியா முழுவதும் மொத்தம் 400 கோடி ரூபாய் வசூல் சேர்த்தது. மேலும் அதிக வருவாய் ஈட்டிய கன்னட மொழித் திரைப்படங்களில் கே. ஜி. எஃப் திரைப்படத்திற்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது காந்தாரா. இந்தப் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட விழாவில் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை தான் எழுதி வருவதாகவும் கூடுதலான தகவலை விரைவில் தெரிவிப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இந்த செய்தியை கேட்டப்பின்பு காந்தாரா படத்தின் ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்திருக்கிறார்கள். தற்போது ரிஷம் ஷெட்டி காந்தாரா திரைப்படத்தின் முழு திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டதாகவும் இந்த ஆண்டில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப் பட்டுவிடும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
காந்தாரா திரைப்படம் வரலாற்று கதையை பின்னனியாகக் கொண்ட திரைப்படம் என்பதால் அந்த வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ளும் முயற்சியில் ரிஷப் ஷெட்டி தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்களிடையே காந்தாரா முதல் பாகம் பெரும் எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடையே உண்டாக்கியிருப்பதால் அந்த எதிர்பார்ப்பிற்கு சற்றும் குறையாமல் படத்தின் இரண்டாம் பாகம் இருக்கவேண்டும் என்பதற்காக படக்குழு கடும் உழைப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது படப்பிற்கான லொகேஷனும் உடைகளும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் தேதி வெளியான கன்னடத் திரைப்படம். இந்த படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரமாக நடித்தவர் ரிஷப் ஷெட்டி. கதாநாயகியாக சப்தமி கெளடா நடித்திருந்தார். மேலும் அச்யுத் குமார், ப்ரமோத் ஷெட்டி கிஷோர் ஆகியவர் நடித்திருந்தனர். கே,ஜி,எஃப் திரைப்படத்திற்கு பின் கன்னட சினிமாவில் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு படமென்றான் காந்தாராவைச் சொல்லலாம். காந்தாரா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்தப் பேச்சு எழுந்தபோது படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி அதை மறுத்துவிட்டார். ஏற்கனவே ஹிந்தியில் டப் செய்யப் பட்டிருப்பதாலும் ரீமேக் செய்வதில் தனக்கு உடன்பாடில்லை எனத் தெரிவித்தார் ரிஷப் ஷெட்டி