ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்திய திரைப்படங்களின் வரிசையில் உலக அளவில் இப்படத்திற்கு மிக அதிகமான ரேட்டிங் பெற்று முன்னிலை வகிக்கிறது. IMDb மற்றும் புக் மை ஷோ 'காந்தாரா' படத்திக்கான ரேட்டிங்கை வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஹிட் வெற்றி :
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி கன்னட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அமோக வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மற்ற மாநிலங்களிலும் வெளியிடப்பட்டது.
100 கோடியை தாண்டியது வசூல் :
கன்னட ரசிகர்களை போலவே மற்ற மாநிலங்களில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ‘காந்தாரா’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்களின் பாராட்டு மட்டுமின்றி தனுஷ், பிரபாஸ், கார்த்தி, ப்ரித்திவிராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை நேரடியாகவும் சோசியல் மீடியா மூலமாகவும் ரிஷப் ஷெட்டிக்கு தெரிவித்து வருகிறார்கள். உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரேட்டிங்கில் முன்னிலை :
IMDbன் ரேட்டிங்கின் படி 'காந்தாரா' திரைப்படம் இந்திய திரைப்படங்களின் வரிசையில் 10க்கு 9.8 புள்ளிகள் எடுத்த தற்போது லீடிங்கில் உள்ளது. இந்திய திரைப்படங்களில் மிகவும் அதிகமான புள்ளிகளை கொண்ட திரைப்படம் இதுவாகும். மேலும் புக் மை ஷோ ரேட்டிங்கின் படி 99% வாடிக்கையாளர்களின் லைக்ஸ்களை பெற்றுள்ளது. அதனோடு 4.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்து இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள் உலகம் முழுவதிலும் இருக்கும் திரை ரசிகர்கள். ஒட்டுமொத்த 'காந்தாரா' படக்குழுவினருக்கு இந்த வெற்றி போய் சேரும். வாழ்த்துக்கள் 'காந்தாரா' டீம்.