நெடுஞ்சாலை, சில்லுன்னு ஒரு காதல் போன்ற திரைப்படங்களின் மூலம்  பிரபலமான இயக்குநர் ஒபிலி.என். கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் 'பத்து தல' திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மணல் மாஃபியாவை மையமாக வைத்து கேங்ஸ்டராக சிம்பு நடித்து வரும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், டிஜே அருணாச்சலம், பிரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் திரையரங்குகளில் மார்ச் 30-ம் தேதி வெளியாக தயாராகி வருகிறது. 



சிம்புவின் அடுத்த இயக்குநர் யார் ?


நடிகர் சிம்புவின் பத்து தல திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்று சோசியல் மீடியாவில்  வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கௌதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்பு அடுத்தாக நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. ஆனால் சினிமா வட்டாரங்கள் தகவலின் படி அதன் இரண்டாம் பாகம் தற்போது நடக்க சந்தர்ப்பங்கள் இல்லை என்பதால் அடுத்ததாக சிம்பு இயக்குனர் மிஷ்கின் இயக்கப்போகும் படத்தில் நடிக்கப்போவதாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால் தற்போது சிம்புவின் அடுத்த படத்தின் இயக்குநர் குறித்த விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


முதல் முறையாக கூட்டணி :


கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே பிரபலமானவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. அப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிக்காக ஒரு சிறப்பான கதையை எழுதி அவரிடம் கூறியுள்ளார். ஆனால் நடிகர் ரஜினி அந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவிக்காததால் அடுத்தாக சிம்புவுக்காக ஒரு கதையை தயார் செய்துள்ளார். இதன் மூலம் தேசிங்கு பெரியசாமி - சிம்பு கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. இந்த தகவல் இணையத்தில் ட்ரெண்டிங்க்காக இருந்து வருகிறது. இது ஒரு பீரியாடிக் திரைப்படம் என்ற தகவல் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. மற்ற தகவல்களை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.