லைவ்வில் முத்தம் கொடுத்த சினேகன்...! கோபப்பட்ட மனைவி..! வைரலாகும் வீடியோ
திருமணம் ஆனதில் இருந்தே, சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்கள்.

லைவ் வீடியோவில் கணவர் சினேகன் முத்தமிடுவதை மனைவி கன்னிகா ரவி எதிர்த்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல தமிழ் பாடலாசிரியர் மற்றும் நடிகரான சினேகன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' இன் தொடக்க சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். அவர் இறுதிப் போட்டி வரை சென்றார். இதன்பின்னர் 2021 ஜூன் 29ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஏழு வருட காதலரான கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார்.
Just In




திருமணம் ஆனதில் இருந்தே, சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து தங்களது நெருக்கமான படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் முத்தமிடும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
சமீபத்திய வீடியோவில், கன்னிகா தனது கணவர் வரைந்த ஓவியம் ஒன்றைக் காட்டி அவரது கருத்தைக் கேட்கிறார். அது அவரைப் போலவே அழகாக இருக்கிறது என்று கூறி அவருக்கு முத்தம் கொடுக்கிறார் சிநேகன். கன்னிகா கோபத்தில் சினேகனிடம், தங்களின் பாலோவர்கள் மோசமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், முத்த வீடியோக்களை வெளியிட மாட்டேன் என்று கூறுகிறார். இதுகுறித்து வீடியோ வைரலாகி வருகிறது.
கடைசியாக 'பிக் பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சியில் 42வது நாளில் வெளியேற்றப்பட்ட சினேகன் தற்போது ஹரியின் 'யானை' படத்திற்கு பாடல்கள் எழுதி வருகிறார். மேலும் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். கன்னிகா ரவியிடம் சில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்