விஜய் டிவி- யின் பாரதி கண்ணம்மா சீரியல் பெண்களுக்கு மிக பிடித்த ஒன்று. சீரியலில், கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார் கதாநாயகன் பாரதி. இருவரது வாழ்க்கையையும் பிரித்து விரும்புவர்தான் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பு நிறத்தில் பிறந்த ஹேமாவை என்ற குழந்தையை கண்ணம்மாவின் மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். மற்றோரு  குழந்தை கண்ணம்மாவிடம் வளர்கிறது.


ஹேமா தன் மகள் என்று தெரியாமலேயே அவள் மீது உயிராக இருக்கிறான் பாரதி. ஹேமா, தனது பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தான் தனது அம்மா எனத் தெரியாமலேயே பாசமாக அன்பாக இருக்கிறாள். கண்ணம்மாவின் குழந்தை தான் லட்சுமி என்ற உண்மை பாரதிக்கு தெரிய வருகிறது. ஹேமா பற்றி உண்மை தெரியவில்லை.


இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியனின் நடிப்பு சீரியல் இல்லத்தரசிகளை கட்டி இழுத்தது.


இந்நிலையில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியனின் சில மாதங்களுக்கு முன்பு அதிலிருந்து விலகினார். இதற்கு காரணம் சினிமா வாய்ப்புகள் அவரை தேடி வந்தது என்று சொல்லப்பட்டது. இருப்பினும் அவர் எந்த படத்திலும் நடிக்கப்போவதாக இது வரை அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.


ஆனால், தற்போது மீண்டும் விஜய் டிவி- க்கு ரோஷினி ஹரிப்ரியன் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் டிவி விரைவில் தொடங்கவிருக்கும் ‘குக் வித் கோமாளி 3’ நிகழ்ச்சியில் அவர் குக்காக கலந்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குக் வித் கோமாளி சன் 3க்கான ப்ரோமா வீடியோவும் வெளியானது. இந்த ப்ரோமோவில் வழக்கமாக, ஷிவாங்கி, மணிமேகலை, செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட் போன்ற முகங்கள் தென்பட்டாலும் சீசனின் முக்கிய முகங்களில் ஒருவரான புகழ் இல்லாதது ரசிகர்களைக் குழப்பமடையச் செய்துள்ளது. இதனால் சீசன் - 3ல் புகழ் பங்கு பெறுகிறார, இல்லையா? எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



விஜய் டிவியில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. பிக் பாஸ், ஜோடி, சூப்பர் சிங்கர், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் 2 மிகவும் அதிகமான வரவேற்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின், சிவாங்கி, புகழ் ஆகியோருக்கு சினிமா வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது.