Kanja Karuppu : ”நான் என்ன லூசா?” வீட்டு வாடகை பஞ்சாயத்து.. கொதித்த கஞ்சா கருப்பு
Kanja Karuppu:சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் நடிகர் கஞ்சா கறுப்பு வசித்து வந்துள்ள நிலையில் தனது வீட்டில் இருந்த கலைமாமணி விருதை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் மீது புகார் அளித்துள்ளார்.

நடிகர் கஞ்சா கறுப்பு தனது வீட்டில் இருந்த கலைமாமணி விருதை காணவில்லை என தனது வீட்டு உரிமையாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா கஞ்சா கறுப்பு:
இயக்குநர் பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படத்தில் அறிமுகமானர் நடிகர் கறுப்பு ரோஜா என்கிற கஞ்சா கருப்பு, இந்த படத்தில் கஞ்சா தோட்டத்தில் வேலை பார்ப்பவராக நடித்ததில் அவரது பெயர் கஞ்சா கறுப்பு என்றானது. இந்த அமீரின் ராம், சண்டக்கோழி, நாடோடிகள் ஆகிய படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானார்.
வாடகை பாக்கி:
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் நடிகர் கஞ்சா கறுப்பு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன், வீட்டை உடனடியாக வீட்டின் உரிமையாளர் காலி செய்ய சொன்னதாகவும், அப்போது கஞ்சா கறுப்பு ஒரு வாரம் நேரம் கேட்டதாகவும் கஞ்சா கறுப்பு கூறப்படுகிறது. இந்நிலையில் வெளியூருக்கு சென்று வந்து பார்த்த போது, தனது பூட்டி இருந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சுவர்கள் பெயிண்ட் அடிக்கப்பட்டதாகவும் மேலும் வீட்டில் இருந்த கலைமாமணி விருது காணாமல் போயுள்ளதாகவும் கஞ்சா கறுப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
வீட்டின் உரிமையாளர் புகார்:
இதனையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் கஞ்சா கறுப்பு பல மாதங்களாக வாடகை தரவில்லை எனவும், ஆனால் கஞ்சா கறுப்பு வீட்டை வேறு ஒருவருக்கு 1000 ரூபாய்க்கு என் வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.. என்னான்னு கேட்டதுக்கு 'உன்ன கொன்னுருவேன்னு மிரட்டுறாரு..' என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக நாம் கஞ்சா கறுப்பை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர் நம்மிடம் பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில் கஞ்சா கறுப்பு தெரிவித்தாவது, மூன்று லட்சம் வாடகை பாக்கி வைத்துவிட்டு எந்த வீட்டு உரிமையாளராவது இருக்க விடுவார்களா, என்னிடம் சொல்லாமலே அவர் அத்துமீறி உள்ளே போயிருக்கிறார்.
இதையும் படிங்க: டோலிவுட்டை கதறவிடும் தனுஷ்! இத்தனை கோடி சம்பளம் கேட்கிறாரா? அதிர்ந்து நிற்கும் தயாரிப்பாளர்கள்
நீங்க வீட்டை உள் வாடகைக்கு விடுறீங்க என்ற கேள்வி, என் வீட்டை நான் எப்படி உள்வாடகைக்கு விட முடியும், நான் என்ன முட்டாளா? என் வீட்டில் என் உதவியாளர், வண்டி ஓட்டுநர் எல்லாம் இருப்பார்கள், நான் வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு செல்வேன் அங்கு எல்லாம் அழைத்து செல்ல முடியுமா என்று கூறினார்.
அடுத்ததாக கார்த்திகை மாதம் வீட்டை காலி செய்வதாக உங்கள் மனைவி கூறியதாக உரிமையாளர் சொன்னாரே என்கிற கேள்விக்கு, “வீட்டை காலி செய்வேன் என்று சொன்னது எல்லாம் உண்மைதான், ஆனால் அந்த என்னை வளர்ப்பு தந்தை இறந்துவிட்டார், நான் தான் கொல்லி வைத்துவிட்டு வந்தேன். அவர் ஆயிரம் சொல்வார், நான் சொல்றதை நீங்க கேளுங்க, இப்போ நான் 10 வீட்டை வாடகைக்கு விட்டு இருக்கேன், வீட்டில் உள்ளே இருப்பவருக்கு தானே பொருள் எல்லாம் சொந்தம்,
நான் என் சொந்தக்காரர் வீட்டில் சாவி கொடுத்தாக அவர் சொல்லுகிறார், அப்படி செய்ய நான் என்ன லூசாம்மா! இவர் எப்படி பூட்டை உடைக்கலாம் என்று கஞ்சா கறுப்பு கூறியிருந்தார்.