மகிழ் திருமேனி
அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளார். அருன் விஜய் நடித்த தடையற தாக்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மகிழ் திருமேனி. அடுத்தடுத்து இயக்கிய மீகாமன் , தடம் , கலகத் தலைவன் ஆகிய படங்கள் வழியாக விமர்சன ரீதியாக கவனம் பெற்றறார். தனது 62 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை அஜித் அவருக்கு வழங்கினார். விடாமுயற்சி படத்திற்கான கதையை அஜித்தே தேர்வு செய்து அதை மகிழ் திருமேனி இயக்கவைத்துள்ளார். படத்தின் ரிலீஸை ஒட்டி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார் மகிழ் திருமேனி. விடாமுயற்சி படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஸ்டண்ட் காட்சிகளில் அஜித்
" அஜித் சாரை நாம் பல விதமாக பார்த்திருப்போம். அஜித்தை ஒரு ஸ்டைலிஷான நடிகராக பார்த்திருப்போம் , ஒரு மிகப்பெரிய ஹீரோவாக பார்த்திருப்போம், அஜித் என்கிற ஒரு நடிகரை நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம். அந்த அஜித்தின் நடிப்பை பார்த்து ரசிப்பதற்காகவே இந்த படத்தை திருப்பித் திருப்பி பார்க்கலாம். அதே மாதிரி இந்த படத்தில் எல்லா ஸ்டண்ட் காட்சிகளையும் அவரே செய்தார். நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன்" என மகிழ் திருமேனி தெரிவித்தார்.