பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் 40 ஆவது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் நாமினேஷன் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் துஷார் மற்றும் பிரவீன் ஆகிய இருவர் எவிக்ஷனின் வெளியே சென்றன. இந்த வாரம் எவிக்ஷனில் கனி திரு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியேறிய கனி
இந்த வார நாமினேஷனில் ரம்யா , சுபிக்ஷா , கானா வினோத் , வியானா , கனி , திவாகர் , சாண்ட்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். நாமினேஷனில் குறைவான வாக்குகளைப் பெற்று இறுதி இடத்தில் இருந்த ரம்யா இந்த வாரம் எவிக்ஷனில் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கனி இந்த வாரம் வெளியேறியுள்ளார்.
கனி திரு, இயக்குநர் அகத்தியனின் முதல் மகள், பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2-ல் போட்டியாளராகப் பங்கேற்று, இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டைட்டில் வின்னர் ஆனவர். தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறையில் நடிகையாகவும், தொலைக்காட்சி ஆளுமையாகவும் அறியப்படும் இவர், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மிகவும் பிரபலமானார். இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே பெரியளவில் ஆதரவு கனிக்கு இருந்து வந்தது. ஆனால் மற்ற போட்டியாளர்கள் டாஸ்க்கில் ஈடுப்பட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்க கனி மட்டும் சமையல் அறையில் இருந்து பாதுக்காப்பாக விளையாடியதாக அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டியில் ஆக்ட்டிவாக விளையாடி பல விமர்சனங்களை சந்தித்தார் கனி. பிக்பாஸ் வீட்டில் தலைவராக கனி இருந்தபோது அவரது டீம் மேட்ஸ் செய்த அட்ராசிட்டி ஏராளம்
பிக்பாஸ் வீட்டில் எஞ்சியுள்ள போட்டியாளர்கள்
பிக்பாஸ் தமிழ் 9 நிகழ்ச்சியில் இதுவரை நந்தினி , ஆதிரை , கலையரசன் , பிரவீன் காந்தி , அப்சரா சி ஜே , துஷார் , பிரவீன் ஆகிய 7 போட்டியாளர்கள் . தற்போது 8 ஆவது ஆளாக கனி திரு வெளியேறியுள்ளார். வைல் கார்டு சுற்றில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 4 போட்டியாளர்களுடன் சேர்த்து தற்போது 15 போட்டியாளர்கள் ஆட்டத்தை தொடர்கிறார்கள்.