கங்குவா:
சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா', ரிலீஸ் ஆன முதல் நாளே தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களையே சந்திதது. படம் வெளியாவதற்கு முன்னரே இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வகையில் 'கங்குவா' இருக்கும் என்று ஓவர் பில்டப் கொடுத்த நிலையில், படம் பலத்த அடிவாங்கியது சூர்யாவை மட்டும் அல்ல ஒட்டுமொத்த படக்குழுவினரையும் அசைத்து பார்த்தது.
மனஉளைச்சலில் சூர்யா:
ஏற்கனவே அடுத்தடுத்த தோல்வி படங்களால் பெருத்த நஷ்டத்தை சந்தித்து கொண்டிருந்த ஞானவேல் ராஜா தலையில் இந்த படமும் இடையை இறக்கியது. ரூ.350 கோடி பட்ஜெட்டுல் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.120 கோடிக்கும் குறைவான வசூலை மட்டுமே பெற்றுள்ளது. 'கங்குவாவின்' மாபெரும் தோல்வியால் சூர்யா தற்போது மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார் என கூறப்படுகிறது.
சூர்யா கோவில் விசிட்:
கடந்த இரண்டு வருடமாக மும்பையை கதி என இருந்த நிலையில், மன அமைதிக்காக தமிழக கோவில்கள் பக்கம் வர துவங்கியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சூர்யா - ஜோதிகா இருவரும் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நிலையில் , இன்று காலை ஜோதிகா திருப்பதி திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
சூர்யா தோல்வி படங்கள்:
ஜோ இப்படி கோவில் கோவிலாக சென்று வர காரணம் சூர்யா தானாம். சிங்கம் 2 படத்துக்கு பின்னர் முட்டி... மோதி பார்த்தும் இவரால், வெற்றிப்படத்தை கொடுக்க முடியாத நிலையில்... குடும்ப ஜோதிடர் கூறிய சில கோவில்களுக்கு தான் இருவரும் சென்று வருவதாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இப்படி வெளியாகும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது சந்தேகமே.
சூர்யா 44 மற்றும் 45 படங்கள்:
'கங்குவாவை' தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44ஆவது படம் உருவாகி வருகிறது. விரைவில் இந்தப் படமும் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தான் இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 45ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடைபெற்ற பூஜையில் ஆர்ஜே பாலாஜி, சூர்யா மற்றும் த்ரிஷா உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில் தான் சூர்யாவுக்கு அடுத்தடுத்து படங்கள் தோல்வி கொடுத்து வரும் நிலையில் கடவுளில் அருளால் அடுத்த படம் வெற்றிபெறுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.