கங்குவா இசை வெளியிடு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த் வீடியோ மூலம் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். அடுத்தடுத்து சூர்யா படங்களை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் , ஆர்.ஜே பாலாஜி  சூர்யவின் தம்பி நடிகர் கார்த்தி அப்பா சிவகுமார் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். கங்குவா படத்தில் நடித்துள்ள போஸ் வெங்கட் இந்த நிகழ்ச்சியில் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Continues below advertisement

சூர்யாவை அரசியலுக்கு அழைத்த போஸ் வெங்கட்

" நிறைய யூடியூப் சேனல்களில் நான் அரசியல் பேசி வருவதால் ஏன் இந்த மேடையில் அரசியல் பேசக்கூடாது என்கிற ஒரு ஆசை. ஒரு சூப்பர்ஸ்டார் தனது ரசிகர்களை வழிநடத்த வேண்டும் என்றால் எப்படி நடத்த வேண்டும் என்றால் சூர்யா சார் உங்கள் மாதிரி வழிநடத்த வேண்டும். தர்மம் செய்ய சொல்லிக் கொடுத்திரணும் , உதவி செய்ய , மக்களோட பிரச்சனைகளை எப்படி கவனிக்க வேண்டும் என்பதை சொல்லி கொடுத்திடனும்.

எல்லாத்துக்கும் மேல் படிப்பை கொடுத்திடனும். அதற்கு பிறகு அரசியலுக்கு வர வேண்டும். ஒரு தலைவன் என்ன வேலை செய்கிறான் என்பது எல்லாம் முக்கியம் இல்லை. அவன் பேச்சாளனாக இருக்கலாம் எழுத்தாளனாக இருக்கலாம். ஆனால் ஒரு தலைவன் தனது ரசிகர்களை முட்டாளாக வைத்திருக்கக் கூடாது அவனை அறிவாளியாக வைத்திருக்க வேண்டும் . அவனை படிக்க வைக்கணும் அறிவை வளர்க்க வேண்டும். அப்படிபார்த்த நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். நிறைய நடித்து எங்களுக்கு நிறைய படங்களை கொடுத்த பிறகு நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் " என போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார் 

Continues below advertisement