சூர்யா
சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா தான் ஏன் சினிமாவில் நடிக்க வந்தேன் என்கிற கதையை தெரிவித்துள்ளார். முன்பே இந்த கதையை அவர் கூறியிருந்தாலும் ரசிகர்கள் தனக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை தெரியப்படுத்த அவர் இந்த கதையை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அம்மா வாங்கிய கடனை அடைக்கதான் நடிக்க வந்தேன்
" நான் ஒரு கார்மெண்ட் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தேன். நான் அங்கு வேலை செய்தவர்களுக்கு நான் ஒரு நடிகரின் பையன் என்று தெரியாது. நான் சேர்ந்த முதல் 15 நாட்களுக்கு 1500 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அதற்கு பின் 3 ஆண்டுகள் அங்கு வேலை செய்து என் சம்பளம் 8000 ரூபாயாக உயர்ந்தது. என் அம்மா ஒரு நாள் எனக்கு சாப்பாடு கொடுத்து வேலைக்கு அனுப்பும்போது அப்பாவுக்கு தெரியாமல் 25000 கடன் வாங்கி இருக்கிறேன் என்று சொன்னார். நான் ஒரு நடிகரின் குடும்பத்திடம் 25 ஆயிரம் கூட இல்லையா என்று ஆச்சரியமாக இருந்தது. என் அப்பா எப்போதும் அவரது சம்பளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் இல்லை. எங்கள் பேங் பேலன்ஸ் 1 லடசத்திற்கு அதிகமாக இருந்ததே இல்ல என்று அம்மா சொன்னார். சில நாட்கள் என் அப்பா 6 முதல் 10 மாசத்திற்கு வேலை இல்லாமல் இருந்திருக்கிறார். அப்போதான் எனக்கு மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன் என் கனவில் கூட நான் ஒரு நடிகனாவேன் என்று நான் நினைத்தது கிடையாது. எனக்கு கேமரா முன்னாள் நிற்க கூட விருப்பவில்லை. கேமராவின் முன் நிற்பதற்கு 5 நாட்கள் முன்புவரை நான் ஒரு நடிகனாவேன் என்று எனக்கு தெரியாது. என் அம்மா வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கதான் நான் நடிக்க வந்தேன்.
மற்றபடி எனக்கு ரசைகர்களுக்கும் தொப்புள்கொடி உறவெல்லாம் கிடையாது. ஆனான் நேருக்கு நேர் படத்தில் நான் நடித்த முதல் ஷாட்டிற்கு இன்று கிடைக்கும் அதே விசில் சத்தமும் கைதட்டல்களும் கிடைத்தது. அந்த அன்பிற்கு ஏதாவது திருப்பிக் கொடுக்கதான் நான் இவ்வளவு கடுமையாக உழைக்கிறேன். ஏதாவது புதிதாக முயற்சி செய்திருக்கிறேன். பல வருடங்கள் கழித்து இந்த படத்தில் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறேன்" என சூர்யா தெரிவித்துள்ளார்.