ஜெயலலிதா கெட்டப்பில் கங்கனா; வைரலாகும் புகைப்படங்கள்..!
ABP Tamil | 22 Mar 2021 01:14 PM (IST)
ஜெயலலிதா கெட்டப்பில் இருக்கும் கங்கனா ரணாவத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
WhatsApp_Image_2021-03-22_at_1241.25
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி 'தலைவி' என்ற படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த் சாமியும் நடிக்கின்றனர். இப்படத்தின் சில புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
தற்போது, படக்குழு புதிய படங்களை வெளியிட்டுள்ளது. இதில், ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது எப்படி இருந்தாரோ, அதேபோல், கங்கணாவும் இருக்கிறார். மேலும், அரசியல் வாழ்க்கையின்போது, ஜெயலலிதா அணிந்திருந்த ஆஸ்தான உடையில் இடம்பெற்றிருக்கும் கங்கனா, ஜெயலலிதாவை நம் கண்முன்னே நிறுத்துகிறார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்ட 'தலைவி' படம் ஏப்ரல் 23ம் தேதி வெளியாகிறது.