Kangana Ranaut: பில்கிஸ் பானு கதையை படம் பண்ண நான் ரெடி.. ஆர்வம் காட்டும் கங்கனா.. டென்ஷனான நெட்டிசன்கள்

Kangana Ranaut : குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவின் கதையை திரைப்படமாக எடுக்க கங்கனா ரனாவத் தயாராக இருப்பதாக பதிலளித்துள்ளார்.

Continues below advertisement

2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தால் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த 21 வயதான பில்கிஸ் பானுவை கொடூர கும்பல் ஒன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. அந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்தது. 

Continues below advertisement

பில்கிஸ் பானு தனக்கு நேர்ந்த வன்கொடுமைக்கு எதிராக சட்டத்தின் மூலம் போராடினர். அதன் மூலம் அந்த கொடூர கும்பலை சேர்ந்த 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். குற்றவாளிகள் மேல்முறையீட்டு செய்தபோதும் உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. 

 


15 ஆண்டுகால தண்டனையை அனுபவித்த குற்றவாளிகளின் வேண்டுகோளை மீண்டும் ஒரு முறை பரிசீலிக்குமாறு குஜராத் அரசிடம் அறிவுறுத்தியது நீதிமன்றம். அந்த வழக்கை விசாரிக்க குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் அந்த 11 குற்றவாளிகளை கடந்த 2022ம் ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை செய்தது. வெளியில் வந்த குற்றவாளிகள் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பெரும் கண்டங்கள் எழுந்தன. 


அதனால் கோபமடைந்த பில்கிஸ் பானு அந்த 11 குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நீதிக்காக போராடினார். அதன் அடிப்படையில் குஜராத் அரசின் முடிவை சில தினங்களுக்கு முன் ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

 

அந்த வகையில் பெண்ணியம் குறித்து தொடர்ச்சியாக குரல் எழுப்பி வரும் கங்கனா ரனாவத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளனர் நெட்டிசன்கள். பில்கிஸ் பானுவின் வாழ்க்கையை ஒரு திரைப்படமாக ஏன் அவர் எடுக்க கூடாது என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கங்கனா ரனாவத் "நான் பில்கிஸ் பானுவின் கதையை படமாக எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாக அதற்காக ஆய்வுகளை எல்லாம் மேற்கொண்டு கதையையும் தயார் செய்துவிட்டேன். ஆனால் இதில் அரசியல் ரீதியிலான பிரச்சினை இருப்பதால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் மட்டுமின்றி ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் கூட இந்த கதையை தயாரிக்க மறுப்பு தெரிவிக்கிறார்கள். மேலும் கங்கனா பிஜேபிக்கு ஆதரவு தெரிவிப்பதால் அவருடன் இணைய முடியாது என ஜியோ சினிமாஸ் நிறுவனுமும் கைவிரித்துவிட்டது. இப்படி இருக்கையில் எனக்கு வேறு வழி என்ன இருக்கிறது? என பதிலளித்துள்ளார்.  ஆனால் இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க: Meenakshi Ponnunga :கடத்தி கொல்லப்படும் ப்ரியா.. கைதாகும் ஷக்தி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

Continues below advertisement
Sponsored Links by Taboola