நாள்: 11.01.2024 - வியாழன்கிழமை
நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
இராகு:
பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடிவரும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களுடன் பொறுமையைக் கடைபிடிக்கவும். நிறைவு நிறைந்த நாள்.
ரிஷபம்
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்தவொரு செயலையும் யோசித்து செய்யவும். ஜாமீன் சார்ந்த செயல்களை தவிர்க்கவும். மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.
மிதுனம்
திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். உள்ளத்தில் அமைதி ஏற்படும். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் உண்டாகும். பொறுமை நிறைந்த நாள்.
கடகம்
சகோதரர்களால் நன்மை உண்டாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
சிம்மம்
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளியூரில் இருந்து அனுகூலமான தகவல் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும். பணியாளர்களால் லாபம் அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். கவலை விலகும் நாள்.
கன்னி
நட்பு வட்டம் விரிவடையும். உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நூதன பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். சோதனை நிறைந்த நாள்.
துலாம்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். செலவிற்கேற்ற வரவுகள் கிடைக்கும். சகோதரர் வழியில் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவரின் உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாள்.
விருச்சிகம்:
இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். எதிராக பேசியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
தனுசு
முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படவும். வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கிய சிந்தனை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே பொறுமை அவசியம். நலம் நிறைந்த நாள்.
மகரம்
பேச்சுக்களில் சற்று நிதானம் வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர் வழியில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்கள் உண்டாகும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். தக்க நேரத்தில் சில உதவிகள் கிடைக்கும். தடங்கல் குறையும் நாள்.
கும்பம்
உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உங்கள் மீதான வதந்திகள் மறையும். செலவு நிறைந்த நாள்.
மீனம்
சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களின் சந்திப்பு ஏற்படும். பாதியில் நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தியை அளிக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். சுகம் நிறைந்த நாள்.