சக்ரவர்தின் அசோக சாம்ராட்', 'பாரத் கா வீர் புத்ரா - மஹாராணா பிரதாப்' மற்றும் 'அலி பாபா தஸ்தான்-இ-காபூல் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர். இவர், சிறிது நாட்களுக்கு முன்னர் தான் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்திலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு காரணம் என்ன?
துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, இது குறித்த பல வதந்திகள் சமூக வலைதளம் முழுவதும் பரவின. துனிஷாவின் மரணத்திற்கு அவரின் காதலன் ஷீசன் முகம்மதுதான் காரணம் என அவரது தாய் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
இதனால், துனிஷாவிற்கும் ஷீசனிற்கும் ஏற்பட்ட காதல் முறிவுதான் அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என பரவலாக பேசப்பட்டது. துனிஷா இறப்பின் போது கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அவரது பிரேத பரிசோதனையில் அப்படி எதுவும் இல்லை என்றே தெரிவிக்கப்பட்டது. இவர்களின் காதல் முறிவிற்கு டெல்லியில் நடைப்பெற்ற ஷ்ரத்தாவின் கொலையே காரணம் என்றும் தகவல்கள் வெளியானது.
கங்கனாவின் இன்ஸ்டா பதிவு
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நடிகர் நடிகைகளுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது, துனிஷா ஷர்மாவின் தற்கொலை குறித்தும் தற்போது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். கங்கனா, பின்வருமாறு அந்த தற்கொலை குறித்து குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு பெண் எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்வாள். ஆனால் தனது காதல் கதையில் காதல் இல்லை என்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். அப்படி ஒரு விஷயம் அவளுக்கு நடந்திருந்தால், தான் முதுகில் குத்தப்பட்டது போல் அவள் உணர்வாள். அதனால், அவள் கொண்டிருந்த காதலை வைத்து அவளை யாரேனும் உபயோகப்படுத்திக் கொண்டார்கள் என்றால், அதன் பிறகு அவள் யாரையுமே நம்ப மாட்டாள். இந்த காரணத்திற்காக ஒரு பெண், தனது உயிரை மாய்த்துக்கொண்டால், அது தற்கொலை அல்ல கொலை” என்று இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார் கங்கனா.
மோடியிடம் வேண்டுகோள்:
ஷீசன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் ஷீசன்-துனிஷாவின் பிரேக்-அப்பிற்கு காரணமாக இருந்துள்ளது. இது குறித்து தனது பதிவில் குறிப்பிட்டுள்ள கங்கனா, “பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது, குற்றச்செயலாக கருதப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், “அப்படி பல பேருடன் தொடர்பில் இருந்து கொண்டு, பிரேக்-அப் செய்யும்போது, அதற்கு ஏற்ற காரணத்தை தெரிவிக்காமல் அப்படியே கழற்றி விடுவதும் தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படவேண்டும்.
நம் நாட்டு பெண்களை பாதுகாப்பது அரசின் கடமை. சீதைக்காக ராமன் நின்றது போல, திரெளபதிக்காக கிருஷ்னன் நின்றதைப்போல, பிரதமர் நரேந்திர மோடியும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்கும் வகையில், வலுவான சட்டதிட்டங்களை உருவாக்க வேண்டும்” என்று மோடியை டேக் செய்து வேண்டுகோள் விடுத்துள்ளார், கங்கனா ரணாவத்.
உணர்ச்சியை வைத்து மோசடி..
பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, இன்னும் சில விஷயங்களை தனது பதிவின் மூலம் பேசியிருந்தார் கங்கனா.
“சட்ட மோசடிகளைப்போல, பண மோசடிகளைப் போல, இட மோசடிகளைப் போல உணர்ச்சிகளை வைத்து செய்யப்படும் மோசடிகளும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். உணர்ச்சியை வைத்து மோசடி செய்யப்பட்டதாகக் கூறுபவர்கள், பொய் சொல்லி இருக்கலாம். ஆனால், எல்லா மோசடியும் பொய்யை வைத்துதானே ஆரம்பிக்கின்றது. மற்ற மோசடிகளை மட்டும் கருத்தில் கொள்ளும் நாம், ஒருவர் உணர்ச்சியினால் ஏமாற்றப்பட்டதாக கூறும்போது அதை ஜோக்காக மாற்றுவது ஏன்?” என்று கேள்வியுடன் தனது பதிவினை வெளியிட்டுள்ளார்.