Kangana Ranaut: நடிகை கங்கனா ரனாவத் தனது திருமணத்தை  பற்றி சில தகவல்களை பகிர்ந்துக் கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கங்கனா ரனாவத்:


கங்கனா ரனாவத் 2006 ஆம் ஆண்டு கேங்ஸ்டர் திரைப்படம் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். தனது முதல் படம் அபார வெற்றி பெற்றது அதுமட்டுமின்றி சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். அடுத்தடுத்து வோ லம்ஹே, ஃபேஷன், குயின் என ஹிட் கொடுத்தார்.


தனது கதையை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வந்தார் கங்கனா. எந்த ஒரு திரையுலக பிண்ணனியும் இல்லாமல் உச்சம் தொட்ட நடிகை என்ற பெயர் வழங்கப்பட்டது. கங்கனா நடித்த குயின் படம் மிகவும் வித்தியாசமான கதைகளம் கொண்டது. இந்த படம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.


சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி திரையுலகை அதிர வைப்பது மட்டும் இன்றி, அரசியலில் பரபரப்பான கருத்தை கூறி நெட்டிசன்களுக்கு கன்டென்ட் தந்து வருகிறார். மேலும் ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் ஆறு முறை இடம்பெற்றுள்ளார்.


கங்கனாவுக்கு காதல் திருமணமா?


கூடுதலாக, இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. இப்படி ஹிந்தியில் தொடர்ந்து ஹிட் கொடுத்த நடிகை தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார்.


அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி படத்தில் நடித்தார். அதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவங்களை மிகவும் தத்ரூபமாக நடித்திருந்தார்.  இதன்பின், இவர் நடித்து வெளியான சந்திரமுகி 2 திரைப்படம், வரவேற்பு பெறாத நிலையில், தேஜஸ் திரைப்படும் படுதோல்வி அடைந்துள்ளது.


பாஜகவின் தீவிரமான ஆதரவாளராக உள்ள இவர், சினிமா துறையை தொடர்ந்து அரசியலில் கால் பதிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.  இந்தநிலையில், இவர் தனது 37வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நாளில், அவரது திருமண வாழ்க்கை குறித்து சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. தனது திருமண வாழ்க்கை குறித்து ககங்னா பேசுகையில், "ஒவ்வொரு பெண்ணும் தனது திருமணம் மற்றும் ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அப்படி தான் நானும் ஆசைப்படுகிறேன்.  


ஐந்து ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கு இருக்கக் கூடிய கனவுதான். எனக்கும் திருமணம் செய்துக் கொண்டு புதிய குடும்ப அமைய வேண்டும். நான் எப்போதும் குடும்பத்துடன் தான் இருப்பேன்.  எனது குடும்பம் எனக்கு மிகவும் முக்கியம். எனவே, ஐந்து ஆண்டுகளுக்குள் திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அது காதல் திருமணமாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்தார்.