நாட்டின் பிரதமர் நரேந்திர மேடி இன்று (செப்டம்பர் 17 ) ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வயது 72 .மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு  பல பிரபலங்கள் மற்றும் தலைவர்கள்  அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை  கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


அதில் ”பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ... சிறுவயதில் ரயில்வே பிளாட்பாரங்களில் டீ விற்றதில் தொடங்கி இன்று இந்த பூமியில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதனாக மாறியது வரை என்ன ஒரு அபாரமான பயணம்... நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம். இப்போது இந்த தேசத்தின் நினைவிலும் அதற்கு அப்பாலும் என்றென்றும் நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் என்றென்றும் நேசிக்கப்படுவீர்கள். உங்கள் பாரம்பரியத்தை எதுவும் அழிக்க முடியாது, அதனால்தான் நான் உங்களை அவதாரம் என்று அழைக்கிறேன்… நீங்கள் எங்கள் தலைவராக இருப்பதை நான் ஆசிர்வாதமாக உணர்கிறேன் “ என குறிப்பிட்டுள்ளார்.




கங்கனா 2018 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷியுடன் பிரதமர் மோடியை சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரோரியுடன் பகிர்ந்துக்கொண்டார். அந்த சமயத்தில் கங்கனா மோடியை புகழ்ந்து பேசியதும் வைரலானது. அதில் “ “மோடியின் வெற்றிக் கதைக்கு நான் ஒரு பெரிய ரசிகை. ஒரு இளம் பெண்ணாக, நமக்கு சரியான முன்மாதிரிகள் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதாவது ஒரு சாமானிய மனிதனின் கிராஃப் மற்றும் லட்சியம் முக்கியம். ஒரு டீக்கடைக்காரராக இருந்து இன்று பிரதமாராகிருப்பது. அவரின் வெற்றியல்ல ..நம்முடைய வெற்றி .  அது நமது ஜனநாயகத்தின் வெற்றி என்று நான் எப்போதும் கூறுவேன். அவர் சரியான முன்மாதிரியாக இருப்பதாக நான் உணர்கிறேன்.” என அந்த நிகழ்வில் கங்கனா கூறியிருந்தார்.


 






கங்கனா சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு  படமான தலைவி படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பயோகிராஃபி திரைப்படமான எமெர்ஜென்ஸி திரைப்படத்தில் இந்திராகாந்தியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் எமர்ஜென்சி படத்தை கங்கனா எழுதி இயக்கியுள்ளார். அனுபம் கேர் ஜே.பி. நாராயணனாகவும், மஹிமா சவுத்ரி புபுல் ஜெயகராகவும், ஷ்ரேயாஸ் தல்படே அடல் பிஹாரி வாஜ்பாயாகவும், மிலிந்த் சோமன் பீல்ட் மார்ஷல் சாம் மனேக்ஷாவாகவும் நடிக்கவுள்ளனர். . இப்படத்தை ரேணு பிட்டி மற்றும் கங்கனா தயாரித்துள்ளனர். படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார்.