காஞ்சிபுரத்தில் லியோ திரைப்படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்களுக்கும், படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கும் சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்கிய  விஜய் மக்கள் இயக்கத்தினரால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


லியோ திரைப்படம்


நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது‌. மற்ற மாநிலங்களில் நள்ளிரவு 12-மணி, அதிகாலை 4-மணி காட்சிகள் திரையிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் காலை 9-மணி முதல் லியோ திரைப்படத்தின் காட்சிகள் வெளியாக உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 




ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் 


காஞ்சிபுரம் பகுதியில் 10 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் பாபு திரையரங்க வளாகத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் விஜய் ரசிகர்கள் லியோ திரைப்படத்தை கண்டு  மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட தலைமை தளபதி மக்கள் இயக்கத்தினர் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்பிகே தென்னரசு ஏற்பாட்டின் பேரில் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்களுக்கும், படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கும் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தியேட்டர் வளாகத்திலேயே சுட சுட சிக்கன் பிரியாணி தயாரித்து பந்தி போட்டு பரிமாறப்பட்டது. சுட சுட வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியை  ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உண்டு மகிழ்ந்தனர்.




 

செங்கல்பட்டில் ஒரு காட்சி முழுவதும் இலவசமாக பெண்களுக்கு ஒதுக்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்


முதல் நாள் காட்சிகள் அனைத்தும் பெரும்பாலான ஆண் ரசிகர்கள் படம் பார்க்கும் நிலையில் தற்போது,  முதல் முறையாக செங்கல்பட்டு எஸ்.ஆர். கே திரையரங்கத்தில் ஒரு காட்சி முழுவதும் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டு உள்ளது. காலை 9-மணிக்கு முதல் காட்சி துவங்கும் நிலையில்,  இரண்டாவது காட்சியான 12.30 காட்சியில் சுமார் 250-டிக்கெட்டுகளை மகளிர் அணி உறுப்பினர்கள் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் சூரிய நாராயணன் தலைமையில், செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி தலைவர் எம்..எஸ். பாலாஜி தலைமையில், இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் அனைத்து டிக்கெட்டுகளும் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.


 



 

முன்னதாக, விஜய் மக்கள் இயக்கம் மற்றும் விஜய் ரசிகர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேண்ட் இசைக்கு ஏற்ப இளம் பெண்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் மகளிர் அணியினர் குத்தாட்டம் போட்டனர். பெண்கள் குத்தாட்டம் போட்டதை பார்த்த விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து அவர்களும் இணைந்து பேண்ட் வாத்தியத்திற்கு ஏற்ப நடனம் ஆடினர்.

 






 

Leo Ticket: லியோ டிக்கெட்டை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய ரசிகர் - காரணம் இதுதானாம்!

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்த்தப்படி இன்று திரைக்கு வந்துள்ளது. லியோ படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்து, ரிலீஸ் வரை லியோ படத்தின் மீதான சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இந்த நிலையில் கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் தலைவர் லியோ படத்தின் டிக்கெட்டை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு வங்கியுள்ளார். விஜய் ரசிகர் மன்றத்திடம் இவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கப்பட்டதாகவும், அந்த தொகை விஜய் கொண்டு வந்துள்ள இலவச கல்வி பயிலகத்திற்கு சென்று உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.