Kanam Trailer released: மீண்டும் ஒரு டைம் ட்ராவல் படம்...'கணம்' படத்தின் ட்ரைலரை இன்று வெளியிட்டார் அனிருத்

  


அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் தயாரிப்பில்  ஷர்வானந்த், ரித்து வர்மா,  மற்றும் அமலா அக்கினேனி நடிக்கும் திரைப்படம் "கணம்". படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என்ற அறிவிப்பை அடுத்து தற்போது வெளியாகியுள்ளது. கனத்த இதயத்தை கனக்க வைக்கிறது இந்த "கணம்" படத்தின் ட்ரைலர். 24, இன்று நேற்று நாளை, டிக்கிலோனா போன்ற டைம் ட்ராவல் திரைப்படங்களின் வரிசையில் இணைந்துள்ளது 'கணம்' திரைப்படம்.



அடுத்த வாரம் ரிலீஸ் :


தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் 'கணம்' திரைப்படம் செப்டம்பர் 9ம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் 'கணம்' என்ற தலைப்பிலும் தெலுங்கில்' ஓகே ஒக்க ஜீவித்தம்' என்ற தலைப்பிலும் வெளியாகவுள்ளது. சுஜித் சாரங் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளையும் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஷர்வானந்த் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் 'கணம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 


 



ட்ரைலரை வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத்:


'கணம்' படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இன்று படத்தின் ட்ரைலரை இன்று இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டார். ஒரு தாய் - மகன் அன்பு மற்றும் பாசம் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இப்படம் ஒரு காலப்பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. 'மாறிபோச்சோ...' என்ற இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 


 







சென்னையில் நடைபெற்ற பிரஸ் மீட்:


செப்டம்பர் 9ம் தேதி 'கணம்' திரைப்படம் வெளியாவதால் விளம்பர பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். இன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அமலா அக்கினேனி, ஷர்வானந்த், ரித்து வர்மா, நாசர், ரமேஷ் திலக், சதிஷ், ரவி ராகவேந்திரா, இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.