தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் தயாரான படம் கணம். தெலுங்கில் ஓக்கே ஒக்கே ஜீவிதம் என்ற பெயரில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்றை பெற்றது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்த இத்திரைப்படத்தில், சர்வானந்த், அமலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 


படம் வெளியான நாளிலேயே தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. பலரின் பாராட்டை பெற்றதோடு, குடும்ப படம் என்கிற பெயரையும் பெற்றது. இது ஒரு டைம் டிராவல் மூவி என்பதால், அது மேல் இன்னும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் ‛கணம்’ பூர்த்தி செய்ததாகவே கூறப்பட்டது. 






விபத்தில் தாயை இழந்த ஒரு சிறுவன், பல ஆண்டுகள் கழித்து இளைஞனாகிறான். ஒரு கட்டத்தில் இளைஞனுக்கு டைம் டிராவலில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கிறது. விபத்தில் இறந்த தனது தாயை காப்பாற்ற அவன் எடுக்கும் முயற்சிகள் தான், படத்தின் கதை.


தாய் பாசத்தோடு பயணிக்கும் இந்த கணம், சென்டிமெண்ட் திரைப்படமாக பலராலும் பார்க்கப்பட்டது. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது. அதன் படி சோனி லைவ் ஓடிடி.,யில் ‛கணம்’ திரைப்படம் வெளியாக உள்ளது. 






அதற்கான முறையான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. அநேகமாக தீபாவளியில் கணம் திரைப்படத்தை வெளியிட வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண