ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தயாரிப்பாளர் கே. ராஜனை பற்றி சமீபத்தில் நடைபெற்ற லோக்கல் சரக்கு படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அது தான் இப்போதய ட்ரெண்டிங் நியூஸ். 


சென்ராயனை சத்தம் போட்ட தயாரிப்பாளர்:


லோக்கல் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே. ராஜன் தயாரிப்பாளர்களை பற்றி பேசியிருந்தார். பல லட்சம் செலவு  செய்து படம் எடுத்தவர்கள் பலர் நடுத்தெருவிற்கு வந்துள்ளனர். ஆனால் நடிகர்கள் மனசாட்சியே இல்லாமல் எத்தனை கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள். அதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷை இனிமேல் நீ படம் எடுக்காதே என கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சென்ராயனை மேடையிலேயே தள்ளி விட்ட கே. ராஜன் ,மிகவும் கடுமையாக பேசினார். அது அந்த சமயத்தில் வைரலானது. 


 



 


கே. ராஜனுக்கு பதிலடி கொடுத்த கனல் கண்ணன் :


அதனை தொடர்ந்து கே. ராஜனின் பேச்சிற்கு தற்போது பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் கனல் கண்ணன். எந்த ஒரு தயாரிப்பாளரையும் நீ படம் எடுக்காதே என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. படத்தை திறமையாக எடுத்தால் நிச்சயமாக அது வெற்றி பெறும். இது வரையில் நான் 700 மேற்பட்ட படங்களில் பணி செய்துள்ளேன். இன்றும் பல தயாரிப்பாளர்கள் மிகவும் பிஸியாக தான் இருக்கிறார்கள். சென்ராயன் மிகவும் தன்மையாக தயாரிப்பாளர்கள் படம் எடுத்தால் தானே எங்களை போன்றவர்கள் பிழைக்க முடியும் என்று கேட்டார். மேடையில் கே.ராஜன் சென்ராயனை சத்தம் போடும் போது அதே மேடையில் திரைப்பட தொழிற்சங்க தலைவர் இருக்கிறார். யாருமே அதை தடுக்கவில்லை. நாம் அனைவருமே ஜெயிக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் அப்படி பேசாதீர்கள் என யாருமே தடுக்காதது எனக்கு மிகவும் மன வேதனையாக இருந்தது என கூறினார் கனல் கண்ணன்.  


 






 


தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்கள் :


மேலும் அவர் கூறுகையில் பல பெரிய பட்ஜெட் படங்கள் எடுப்பவர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று படம் எடுக்கிறார்கள் அது அவர்களின் விருப்பம். ஆனால் பல தயாரிப்பாளர்கள் நம்முடைய தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் அவர்கள் முன்னேற வேண்டும் என இங்கே எடுப்பவர்களும் உண்டு. அது போன்ற சமயத்தில் படம் எடுக்க கூடாது என சொல்வது தவறு. அனைவரும் அதை கேட்டு கொண்டு அமைதியாய் இருந்தது அதை விட தவறு. 


இவ்வாறு சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற லோக்கல் சரக்கு படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மிகவும் ஆவேசமாக பேசியிருந்தார் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன். இது தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  


இயக்குனருக்கு கை கொடுத்த யோகி பாபு :


இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான "சுறா" திரைப்படத்தை இயக்கிய எஸ்.பி. ராஜ்குமார் எடுத்த அடுத்த இரண்டு திரைப்படங்களும் தோல்வியை சந்தித்ததால் வாய்ப்புகள் இன்றி தவித்தார். யோகி பாபு உதவியால் இயக்குனர் எஸ். பி. ராஜ்குமார் தற்போது ஒரு முழு நீள காமெடி கதையை "லோக்கல் சரக்கு" என்ற பெயரில் படமாக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு மற்றும் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடித்துள்ளனர்.