திருமண கோலத்தில் நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை அஞ்சு குரியனின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
கனா பட நடிகர் தர்ஷன்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் கனா. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து அஜித் குமார் நடித்த துணிவு , சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் ஆகிய படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் தும்பா படத்தின் நாயகனாகவும் நடித்தார். வளர்ந்து வரும் நடிகரான தர்ஷன் மற்றும் நடிகை அஞ்சு குரியன் ஆகிய இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் , மலையாளம் மற்றும் இந்திப் படங்களில் நடித்து வரும் இளம் நடிகை அஞ்சு குரியன். தமிழில் வெளியான நேரம் படத்தில் முதல்முதலில் நடித்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ஓம் ஷாந்தி ஓஷானா , பிரேமம் , கவி உத்தேசிச்சது உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் சென்னை டூ சிங்கப்பூர் , சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
திடீர் திருமணமா ? விளம்பரமா ?
நடிகர்கள் திடீரென்று எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகளை நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம் சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் தனது காதலனான, ஜாக்கியை கோவாவில் தனது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். அவரைத் தொடர்ந்து நடிகை டாப்ஸி தன் 10 வருட காதலனை மணமுடித்தார். இப்படியான நிலையில் தர்ஷன் மற்றும் அஞ்சு குரியன் ஆகிய இருவரும் திருமண கோலத்தில் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சமீபத்தில் நடிகை கெளரி கிஷன் 96 படத்தில் தன்னுடன் நடித்த ஆதித்யன் பாஸ்கரனுக்கு தாலி கட்டும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு தான் தெரிந்தது அந்த புகைப்படம் இருவரும் இணைந்து நடித்துள்ள ஹாட்ஸ்டார் படத்திற்கான ப்ரோமோஷன் என்று...
அதேபோல் தர்ஷன் மற்றும் அஞ்சு குரியன் ஆகிய இருவரும் திருமண கோலத்தில் காணப்படும் இந்த புகைப்படம் ஒரு நகை விளம்பரத்திற்கான படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் குழப்பம் நீடித்து வருகிறது.