விக்ரம் படத்தை வெற்றிப்படமாக்கிய 5 மொழி ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படம் வசூலில் உலகளவில் ரூ.100 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படம் ரிலீஸான நாள் முதல் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். படம் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி தள்ளியுள்ளனர்.
இதனிடையே வசூலிலும் இப்படம் சாதனைப் படைத்துள்ளது. கிட்டதட்ட உலகளவில் 200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள விக்ரம் இப்படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டதாக கூறப்படும் விக்ரம் படம் இந்தி மொழிகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என கூறப்பட்டது.
தன் நடிப்பு பயணத்தின் தொடக்க காலமான 80களிலேயே, 'ஏக் துஜே கேலியே’ படம் மூலம் இந்தி ஆடியன்ஸ்களின் மனதைக் கவர்ந்து பான் இந்திய நட்ச்சத்திரமாக ஜொலித்தவர் நடிகர் கமல்ஹாசன். ஆனால் அவரது விக்ரம் படம் தற்போது அங்கு எடுபடாதது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் கமல் வெளியிட்டுள்ள வீடியோவில் விக்ரம் படம் பான் இந்தியா படமாக வெற்றி பெற்றதாக பேசியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.