Indian 2 shooting from today : கமல்ஹாசன் இல்லாமல் தொடங்கப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு...என்ன காரணம்?
தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. திரையுலகின் ஜாம்பவான்களாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், பாலிவுட் கிங் காங் ஷாருக்கான் ஆகிய மூவரின் திரைப்படங்களும் ஒரே நேரத்தில் சென்னையில் நடைபெற்றுவருகிறது என்பது தான் அந்த நற்செய்தி.
சூப்பர் ஸ்டாரின் "ஜெயிலர்" :
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் "ஜெயிலர் " திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
மறுபடியும் தொடங்கும் "இந்தியன்" 2 ஷூட்டிங் :
அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட சில அசம்பாவிதங்களால் அதன் படப்பிடிப்பு சிறிது காலம் தள்ளிவைக்கப்பட்டது. அதற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இருவரும் வெல்வேறு ப்ரொஜெக்ட்களில் பிஸியாக இருந்ததால் இதுவரையில் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியின் போது லைக்கா சுபாஷ்கரன் இடம் பேசி இந்தியன் 2 படப்பிடிப்பை ஆரம்பிக்க பேசியிருந்ததை அடுத்து படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
இன்று இனிதே ஆரம்பம்:
அந்த வகையில் இந்தியன் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகம் அருகில் இருக்கும் ஒரு பழமைவாய்ந்த பழைய கட்டிடத்தில் இந்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து செப்டம்பர் 2ம் தேதி தான் சென்னை வருவார் என்பதால் மற்ற நடிகர்களின் காட்சிகளுக்கான ஷூட்டிங் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் பிரியா பவனி ஷங்கர், நெடுமுடி வேணு, சித்தார்த் , ரகுல் ப்ரீத், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சின்ன கலைவாணர் விவேக் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்க உள்ளார்.
சென்னையில் ஷாருக்கான்:
மறுபுறம் பாலிவுட் கிங் காங் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கும் "ஜவான்" திரைப்படமும் சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஷாருக்கான் நடிக்கும் காட்சிகள் சென்னையில் 20 நாட்களுக்கு நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் "வாரிசு" திரைப்படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.