KH234


மணிரத்னம் மற்றும் கமல்ஹாசனின் கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் நாயகன். 1987ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இதுவரை வெளியான சிறந்த கேங்ஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சரண்யா பொண்வண்ணன், டெல்லி கணேஷ், நாசர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.


இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்தார்.  நாயகன் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் மற்றும் கமல் மீண்டும் இணைவதற்கு சுமார் 35 ஆண்டுகள் கடந்துள்ளன. கமலின் 234ஆவது படத்தை மணிரத்னம் இயக்க இருக்கிறார் என்கிற தகவல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது.


இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு  இசையமைக்கிறார். அன்பறிவு மாஸ்டர் சண்டைப் பயிற்சிகளை அமைக்கிறார்கள். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் ரவிவர்மன் ஒளிப்பதிவும் செய்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் கூடுதல் திரைக்கதை எழுதுகிறார்.


நடிகர்கள்


கமல்ஹாசன் தவிர்த்து இந்தப் படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா நடிக்க இருக்கிறார்கள். மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் ஓகே காதல் கண்மணி படத்தில் நடித்திருந்ததைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் இரணடாவது முறையாக நடிக்க இருக்கிறார்.


ஆயுத எழுத்து மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்த த்ரிஷா, தற்போது மூன்றாவது முறையாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர்களைத் தவிர்த்து பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்த நடிகர் ஜெயம் ரவியும் இந்தப் படக்குழுவில் இணைந்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த இரண்டு நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


டைட்டில்


 நாளை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 69ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்நிலையில் கமல் படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது படக்குழு. வழக்கமாக மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு கவித்துவமான வரிகள் வைக்கப்படும் நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இந்தப் படத்திற்கு ‘தக் லைஃப்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.