Kamal - Sridevi :இப்படி ஏமாத்திட்டீங்களேன்னு கேப்பாங்க.. ஆனா.. ஸ்ரீதேவி பற்றி மனம் திறந்த கமல்... பிளாஷ்பேக் ஸ்டோரி 

Kamal - Sridevi : கமல் ஸ்ரீதேவி உறவை பற்றி பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவை பற்றி மனம் திறந்த பழைய வீடியோ வைரலாகி வருகிறது

Continues below advertisement

தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கும் ஜாம்பவான்களின் ஒருவர் உலகநாயகன் கமல்ஹாசன். நடிப்பின் ராட்சசன் என சொல்லும் அளவுக்கு எல்லைகளை கடந்து நடிக்க கூடிய கமல்ஹாசன் காதல் மன்னனாகவும் கொண்டாடப்பட்டார். 

Continues below advertisement

கமலின் ஹீரோயின்கள் :

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில ரீல் ஜோடிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறுவார்கள். திரையில் அவர்களின் கெமிஸ்ட்ரியை பார்த்து இவர்கள் ரியல் ஜோடிகளாக இருந்தால் எப்படி இருக்கும் என நினைக்க கூடும். நடிகர் கமல்ஹாசனுடன் நடித்த அனைத்து நடிகைகளுடனும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட்டாகும். கமல் - ஸ்ரீவித்யா, கமல் - ஸ்ரீப்ரியா, கமல் - ரேவதி, கமல் - ஸ்ரீதேவி, கமல் - ஜெயப்பிரதா, கமல் - ஊர்வசி இப்படி 80ஸ் ஹீரோயின்கள் அனைவருடனும் கமல் இணையும்போது அது ஆன் ஸ்க்ரீனில் ஒரு மேஜிக்கல் மொமெண்ட்டாக இருக்கும். 


கமல் - ஸ்ரீதேவி காம்போ :

அப்படி ஒரு வசீகரமான ஜோடிகளான கமல் - ஸ்ரீதேவி இருவரும் முதலில் 'மூன்று முடிச்சு' திரைப்படத்தில் தான் இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து 16 வயதினிலே, வாழ்வே மாயம், சகலகலா வல்லவன், மூன்றாம் பிறை, வறுமையின் நிறம் சிவப்பு, சிகப்பு ரோஜாக்கள், சின்னஞ்சிறு வயதில் என ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். கமல்ஹாசனுடன் அதிக அளவிலான படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி என்ற பெருமையையும் பெறுவார். 

கிசுகிசுக்கப்பட்ட ஜோடி :

இவர்கள் இருவருக்கும் ஏதோ இருக்கு, இருவரும் காதலர்கள் என பல வதந்திகள் எழுந்தன. ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லை சினிமா வட்டாரத்திலும் இதே கிசுகிசுதான் இருந்தது. ஆனால் உண்மையில் கமல் - ஸ்ரீதேவி உறவு எப்படி என்பதை பற்றி உலக நாயகனே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். 

 


ஸ்ரீதேவி பற்றி கமல் :

13 வயதில் இருந்தே ஸ்ரீதேவியுடன் பழகி வருகிறேன். எங்க இரண்டு பேருக்கும் இடையே இருக்கும் உறவு பத்தி சொல்லவே முடியாது. நானும் அவருடைய  வீட்டில் ஒருவர்தான். என்னை ஒருமுறை கூட பெயர் சொல்லி அழைத்ததே கிடையாது. என்றுமே சார் என அழைக்கக்கூடிய ஸ்ரீதேவிக்கு என்னை கண்டாலே பயம். நான் கிட்ட சென்று முறைப்பது போல பார்த்தாலே போதும்.. பயந்து விடுவார். எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவானது ஒரு பள்ளி தோழிபோலதான் இருக்கும். இன்னும் சொல்ல போனால் ஒரு அண்ணன் - தங்கைபோல தான் நாங்கள் பழகுவோம். அப்படித்தான் நான் அவருக்கு திட்டி திட்டி சொல்லிக் கொடுப்பேன். இந்த உறவை வெளியில் சொன்னால் யாருமே நம்ப தயாராக இல்லை. 

என்ன இப்படி சொல்றீங்க. எத்தனை  காதல் படங்களில் நீங்க இரண்டு பெரும் நடிச்சு இருக்கீங்க... நாங்க உங்க இரண்டு பேரையும் வைத்து கனவு எல்லாம் கண்டு இருக்கோம். இப்படி ஏமாத்திட்டீங்களே.. இப்படி வந்து தங்கச்சின்னு சொல்றீங்களே? அப்படின்னு பலரும் கேப்பாங்க. ஆனால் அது அப்படி இல்லை என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola