இன்று தமிழ் சினிமாவே சூப்பர் ஸ்டார் என நடிகர் ரஜினிகாந்தை கொண்டாடி தீர்க்கிறார்கள். ஆனால் அவருக்கு இந்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்ததற்கு பின்னால் மிகவும் போராட்டம் கலந்த ஒரு கடினமான பயணம் இருந்துள்ளது. பெங்களூரில் சிவாஜி ராவாக பிறந்தவருக்கு சிறு வயது முதலே கலை மீது அளவு கடந்த காதல் இருந்தது. இருப்பினும் தனது சூழ்நிலையால் பல கூலி வேலைகளை செய்து வர பின்னர் பஸ் கண்டக்டராக பணிபுரிந்த போதிலும் தொடர்ந்து நாடங்ககளில் நடித்து வந்தார். 


 



வாழ்க்கை மாறிய தருணம் :


அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட் தான் சிவாஜி ராவ் வாழ்க்கையை மாற்றிய ஒரு இடம். தமிழ் சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்க திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் ஏராளமான திரை நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியதில் பெருமைக்குரியவர். அவர் தான் நடிகர் ரஜினிகாந்தை முதல் முறையாக திரையில் அறிமுகப்படுத்தியவர். அந்த வாய்ப்பு ரஜினிக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?


கமல்ஹாசன் சொன்ன ஸ்டோரி :


நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உலகநாயகன் கமல்ஹாசன் 'அபூர்வ  ராகங்கள்' படத்தின் ஆடிஷன் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அந்த சமயத்தில் கே. பாலச்சந்தர் சார் மிகவும் பிஸியாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வந்தார். அப்போது அபூர்வ ராகங்கள் படத்தின் ஆடிஷன் நடைபெற்று கொண்டு இருந்தது. ஏராளமானோர் வெவ்வேறு இடங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர். முதலில் வந்தவர் புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து வந்து இருந்தார். அவரை பார்த்தாலே பகீர் என இருந்தது. அவர் தான் நடிக்க போகிறார், சான்ஸ் போச்சே என நினைக்கும் போதே அவர் டயலாக் பேசி காட்டும் போது எங்கோ தவறு செய்துவிட்டார் என்பதால் இயக்குநருக்கு அவரை பிடிக்காமல் போய்விட்டது.  


 




அப்போது ஜன்னல் கண்ணாடி வழியாக ஒரு பையன் அடிக்ஷன் நடப்பதை எட்டி பார்த்து கொண்டு இருந்தார். யார் அந்த பையன் அவனை உள்ளே வர சொல்லு என சொன்னார் இயக்குநர் பாலச்சந்தர். உள்ளே வந்த அந்த பையனை பார்த்த இயக்குநருக்கு ஏதோ ஈர்ப்பு ஏற்பட அவரை செலக்ட் செய்துவிட்டார். அவர் தான் ரஜினிகாந்த் என்றார் கமல்ஹாசன். 


இதுவரையில் நடிகர் ரஜினிகாந்த் எத்தனையோ உயரங்களை ஆன் ஸ்கிரீனில் தொட்டு இருந்தாலும் ஆஃப் ஸ்கிரீனில் அவர் செய்த மேஜிக் இது.






கமல்ஹாசன் சொன்ன இந்த குட்டி பிளாஷ் பேக் ஸ்டோரி கேட்ட அனைவருக்கும் அப்படியே புல்லரித்தது. அது தான் ரஜினிகாந்த்... அனைவரையும் ஈர்க்ககூடிய அந்த காந்த சக்தியை இயல்பாகவே கொண்டவர் ரஜினிகாந்த் என்பதை நிரூபித்த ஒரு அழகான தருணம் அது. அந்த மேஜிக்கல் மொமெண்ட் தான் இன்று வரை அவரை சிம்மாசனத்தில்  உட்கார வைத்து அழகு பார்க்கிறது. தி மேன் ஆஃப் கிரேட்டன்ஸ் அண்ட் சிம்ப்ளிசிட்டி... ஒன் அண்ட் ஒன் ரஜினிகாந்த்!