வாரிசு' திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து கொண்டு இருப்பது தளபதி 67 படத்தின் அப்டேட் பற்றி தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 67வது திரைப்படம் தற்காலிகமாக தளபதி 67 என பெயரிடப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இந்த காம்போ மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


 



 


முதல்முறையாக உலகநாயகன் - இளைய தளபதி கூட்டணி :


தளபதி 67 திரைப்படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் 2022ம் ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் திரைப்படமான 'விக்ரம்' திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த கதாபாத்திரத்தை மீண்டும் இப்படத்தில் நடிக்க உள்ளார் என்றும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சிறப்பு தோற்றத்தில் அவர் தோன்றுவார் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் உலகநாயகனுடன் இளைய தளபதி விஜய் திரையை பகிரும் முதல் திரைப்படம் இதுவாகும். 






லோகேஷ் யுனிவர்ஸில் சீயான்:


மேலும் அடிஷனல் தகவலாக தேசிய விருது பெற்ற நடிகர் சீயான் விக்ரம் இப்படத்தின் முக்கிய வில்லனாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. வதந்திகளின் படி, தளபதி விஜய்யின் படம் மூலம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் சீயான் விக்ரமை அறிமுகப்படுத்தவுள்ளார். 'விக்ரம்' திரைப்படத்தில் நடிகர் சூர்யா எப்படி கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்தாரோ அதே போல தளபதி 67 திரைப்படத்தில் சீயான் விக்ரம் என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் விக்ரம் ஏற்கனவே ஒப்புதல் கொடுத்து 30 நாட்கள் கால்ஷீட்டையும் கொடுத்துவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 







இந்த லேட்டஸ்ட் தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.