கமலின் நீண்ட நாள் கனவாக மருதநாயகம் படத்தின் பட்ஜெட், கதைக்களம் கொண்ட தொகுப்பினை சோனி நிறுவனத்திடம் அளிக்கப்பட்டு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக நாயகனின் மருதநாயகம் புத்துயிர் பெற்றுள்ளது.
மருதநாயகம், 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வீறுக்கொண்ட எழுந்த வீரர். முகமது யூசப் கான் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக தனது படைவீரர்களுடன் எவ்வாறு போராடினார். என்பது போன்ற அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டிருந்தார் உலக நாயகன் கமல்ஹாசன். 1997 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பு தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார். இதனால் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாக்களைத் திரும்பிப்பார்க்கும் வைக்கும் வகையில் அமைந்திருந்தது.
பொதுவாக இப்படம் சரித்திர பின்னணி கதைக்கொண்டதால் 1000 குதிரைகள், யானைகள், போர்வீரரர்கள், அவர்களுக்கான உடைகள், உணவுகள் என செலவுகள் ஏராளம். ஆனால் இன்றைக்காலக்கட்டங்கள் போல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எதுவும் இல்லாததாகல் இதன் மதிப்பு பல கோடி ரூபாய்க்கும் மேலாக இருந்தது. இதனால் இப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது. ஆனால் கமல் ஒருமுறை இப்படம் பணப்பிரச்சனையினால் மட்டும் நிறுத்தி வைக்கப்படவில்லை எனவும் சர்வதேச அளவில் விநியோக நெட் தேவை என தெரிவித்திருந்தார். மேலும் இது தமிழ்ப்படம் மட்டுமில்லாமல், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் படமும் என தெரிவித்திருந்தார்.
இதுப்போன்ற பல்வேறு காரணங்களுக்காக இப்படம் இன்னும் முடிக்கப்படாமல் இருந்தாலும், விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் கமல். இதற்கேற்றால் போல் பல ஆண்டுகள் ஆன போதும் இப்படத்தின் வெளியீடு குறித்து வரும் வீடியோக்கள் அனைத்தும் வைரலாகிவருகிறது. இந்நிலையில் தான் கமலின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மருதநாயகத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக தற்போது இப்படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து சோனி நிறுவனத்திடம் கமல்ஹாசன் ஆலோசித்துவருகிறார்.
இந்நிலையில் கமலின் கனவுப்படமான மருதநாயகம் படத்தின் பட்ஜெட், கதைக்களம் கொண்ட தொகுப்பினை சோனி நிறுவனத்திடம் உலக நாயகன் கமல்ஹாசன் அளித்துள்ளார். தொடர்ந்து இப்பணி குறித்த ஆலோசனையில் இறங்கியுள்ள கமலுக்கு கிரீன் சிக்கல் வந்தவுடன் வீரர் மருதநாயகத்தின் படம் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர். தற்போது சோனி நிறுவனம் ராஜ்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை ராஜ்கமல் நிறுவனம் இணைத்து தயாரிக்கவுள்ளது. இதற்கான ஆரம்பக்கட் ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.