ஃபஹத் பாசில் :


நடிப்பு அசுரன் என கொண்டாடப்படுபவர் நடிகர் ஃபஹத் பாசில். கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் கச்சிதமாக பொறுந்தக்கூடிய அளவிற்கு தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர். ஃபஹத் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்த விக்ரம் படத்தில் தனது பங்களிப்பை வெகுச்சிறப்பாக வெளிப்படுத்தினார் ஃபஹத்.






மலையன்குஞ்சு :


இந்த நிலையில் ஃபஹத் மீண்டும் மலையாள சினிமாவில் கவனம் செலுத்த துவங்கியிருக்கிறார். அவரது நடிப்பில் வருகிற ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் மலையன்குஞ்சு.  இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மாலிக் படத்தை இயக்கிய சஜிமோன் . இப்படத்தை ஃபஹத் தயாரித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


இந்த படத்தின் டிரைலர் நேற்று  (ஜூலை 15 ) வெளியானது. டிரைலரின் ஆரம்ப காட்சியில் குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டு எரிச்சலடையும் ஃபஹத் ,டிரைலரின் இறுதியில் பொன்னி என்னும் குழந்தையை தேடி , மணல் சரிவில் சிக்கிக்கொள்கிறார். ஆரம்பத்தில் எந்த குழந்தையை கண்டு ஃபஹத் எரிச்சலைடைகிறாரோ! அதே குழந்தையைதான் மணல் சரிவில் தேடுகிறாரோ என்னும் எதிர்பார்ப்பு டிரைலர் மூலம் ஏற்படுகிறது. மலையன்குஞ்சு திரைப்படம் முழுக்க முழுக்க பார்வையாளருக்கு த்ரில்லர் அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







’விக்ரம் ’பாணியில் வாழ்த்து சொன்ன கமல் :


இந்த நிலையில் கமல்ஹாசன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மலையன்குஞ்சு திரைப்படத்தின் டிரைலரை ஷேர் செய்து “ Fazilinde kunju Endeyimanu = ஃபாசிலின் குழந்தையும் என்னுடையதுதான்.


எப்பொழுதும் மேன்மை வெல்லட்டும். ஃபஹத் மேலும் முன்னேறுவார். எனது ஏஜெண்ட்ஸ் அனைவரும் வெற்றி பெற வேண்டும். தோல்வி என்பது ஒரு தேர்வு அல்ல. ஒரு டீம் என்றால் என்ன என்பதைக் காட்டுங்கள்.” என குறிப்பிட்டுள்ளார். விக்ரம் திரைப்படத்தின் இறுதியில் கமல்ஹாசனின் குழுவில் ஒருவராக மாறும் ஃபஹத்தை , தனது ஏஜென்ட் என குறிப்பிட்டு வாழ்த்து கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்றை பெற்றுள்ளது.