தக் லைஃப் 


நாயகன் படத்திற்கு பின் கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தக் லைஃப் . சிலம்பரசன் , த்ரிஷா , ஜோஜூ ஜார்ஜ் , அஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்று உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதன்படி 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




மணிரத்னம் கமல் கூட்டணியில் 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதன்பிறகு இருவரது கூட்டணியில் இன்னொரு படம் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். தற்போது கிட்டதட்ட 37 ஆண்டுகளுக்குப் பின் இருவரது கூட்டணியில் உருவாகியிருக்கிறது தக் லைஃப் . முன்னதாக இப்படத்தில் ஜெயம் ரவி துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் நடிக்க இருந்ததாக அறிவிப்பு வெளியானது. தவிர்க்க முடியாத காரணங்களால் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலகினார்கள். இதன் பின் சிம்பு மற்றும் அசோக் செல்வன் இப்படத்தில் இணைந்தார்கள். இந்தியாவில் சென்னை, புதுச்சேரி , டெல்லி ஆகிய மாநிலங்களிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.