34 Years of Vettri Vizhaa: அசத்தலான மேக்கிங்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்.. கமலின் “வெற்றி விழா” ரிலீசாகி 34 ஆண்டுகள் நிறைவு..!

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் ஹாலிவுட் பாணியிலான கதையமைப்பில் உருவான “வெற்றிவிழா” படம் வெளியாகி இன்றோடு 34 ஆண்டுகளாகிறது. 

Continues below advertisement

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் ஹாலிவுட் பாணியிலான கதையமைப்பில் உருவான “வெற்றிவிழா” படம் வெளியாகி இன்றோடு 34 ஆண்டுகளாகிறது. 

Continues below advertisement

வித்தியாசமான படம் 

மறைந்த இயக்குநர், நடிகர் பிரதாப் போத்தனின் இயக்கத்தில் வெளியான வெற்றி விழா படத்தில் கமல், அமலா, பிரபு, குஷ்பூ, சசிகலா, சலீம் கவுஸ், சௌகார் ஜானகி, ஜனகராஜ் என பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்த நிலையில், வெற்றி விழா படம் ராபர்ட் லுட்லம் எழுதிய The Bourne Identity நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. 

படத்தின் கதை

குற்றவாளிகளை பிடிக்க அவர்கள் கூட்டத்துக்குள்ளே சென்று கட்டம் கட்டி பிடிப்பது என்பது காலம் காலமாக தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட கதை. அதை சொல்லும் விதம் என்று ஒன்று இருக்கும். அதில் தான் சம்பந்தப்பட்ட படங்கள் ஒவ்வொன்றும் தனித்து தெரியும். அப்படி தெரியும் படங்களில் ஒன்று தான் “வெற்றி விழா”. 

போலீஸ் அதிகாரியான கமல், கொள்ளை கூட்ட தலைவன் ஜிந்தாவாக வரும் சலீம் ஹவுஸ் கூட்டத்துக்குள் ஆண்டனி ராஜ் என்ற பெயரில் நுழைந்து அவரின் நம்பிக்கையை பெறுகிறார். அந்த கூட்டத்தால் கமலின் மனைவி அமலா உயிரிழந்திருப்பார். அந்த கூட்டத்தில் இருந்து தப்பிக்கும் நிலையில், சுடப்பட்டு மயக்க நிலையில் இருப்பார். அவரை சௌகார் ஜானகி, சசிகலா இருவரும் காப்பாற்றி அடைக்கலம் தருவார்கள்

கண் விழிக்கும் கமலுக்கு தான் யார் என்பது மறந்து போயிருக்கும். சசிகலா கமலை விரும்பும் நிலையில் இருவரின் திருமணம் நடக்கும் நிலையில் தன்னைப் பற்றிய க்ளூ கிடைக்கிறது. உடனே கமல் சசிகலாவை அழைத்துக் கொண்டு சென்னை வருகிறார். அவர் பெயர் ஆண்டனிராஜ் என்று வந்த இடத்தில் தெரிய வரும். கமலை ஒருபுறம் கொள்ளைக்கூட்டமும், மறுபக்கம் போலீசும் துரத்த குழம்பமடைவார். இப்படியான நிலையில் தான் அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்றும், மனைவி அமலா கொல்லப்பட்ட கதையையும் சக போலீஸான ராதாரவி கூறுவார். 

இதனையடுத்து கொள்ளைக்கும்பல் கமலை துரத்த அவரோ பிரபு, குஷ்பூ நடத்தும் மெல்லிசை குழுவில் இணைவார். பிரபு,கமல் நண்பர்களாவார்கள். இப்படியான நிலையில் சலீம் ஹவுஸ் சசிகலா, குஷ்பூ இருவரையும் பிடித்து வைத்துக் கொள்ள, அவர்களை கமல், பிரபு இருவரும் எப்படி மீட்டார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும் . 

முழுக்க முழுக்க ட்விஸ்ட் 

இந்த படம் பார்த்தால் மிரண்டு போகும் அளவுக்கு அடுத்தடுத்து ட்விஸ்டுகளாலும், அட்டகாசமான மேக்கிங்காலும் அசத்தியிருப்பார் பிரதாப் போத்தன். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டது. பிரதாப் படங்களில் எல்லாம் வில்லன் அதகளம் பண்ணுவார். இதில் சலீம் கவுஸ் பண்ணுவதையெல்லாம் பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும். கமல் - அமலா, பிரபு - குஷ்பு ஆகிய ஜோடிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டனர். இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக அமைந்தது. இப்படம் நிச்சயம் கமலின் கேரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola