திரையுலகில் அவ்வப்போது நடிகர்கள் பெண் வேடமிட்டு நடிப்பது என்பது சகஜமான ஒன்றாகி விட்டது. சிவாஜி கணேசன் முதல் ரஜினி, கமல், விஜய், விக்ரம், விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், பிரஷாந்த் என டாப் ஹீரோக்கள் லிஸ்டில் இருக்கும் பெரும்பாலானவர்கள் பெண் வேடமிட்டு ஒரு படத்திலாவது நடித்து விடுவார்கள். ஒரு சில ஹீரோக்கள் பெண் வேடங்களில் படு சூப்பராக இருந்தாலும் ஒரு சிலருக்கு அது பொருத்தமாக அமைவதில்லை. 


 



ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் மடிசார் உடை அணிந்து நடிகர் கமல்ஹாசன் அருகில் பெண் வேடமிட்டிருக்கும் ஒரு பிரபல நடிகரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது. அந்த ஃப்ளாஷ்பேக் புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று உற்றுநோக்கிய ரசிகர்களுக்கு கிடைத்த விடை பிரபல நடிகர் சிவகுமார். 1975ம் ஆண்டு வெளியான 'தங்கத்திலே வைரம்' என்ற படத்தில் கமல்ஹாசன் உடன் பெண் வேடமிட்டு ஒரு பாடலில் என்ட்ரி கொடுப்பார் நடிகர் சிவகுமார். அந்த ஸ்டில் தான் இந்த பிளாஷ் பேக் புகைப்படம். 


எம்.ஜி.ஆர் - சிவாஜி காலகட்டம் சற்று குறைய ஆரம்பிக்க ரஜினி - கமல் படங்கள் அதிக அளவில் வெளியாகின. அந்த வகையில் 1975ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அவரைக் காட்டிலும் கமல் நடித்த படங்கள் அதிக அளவில் வெளியாகின. ஆரம்பக் காலகட்டத்தில் ஹீரோவாக சில படங்களில் நடித்தாலும் செகண்ட் ஹீரோவாக, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிகர் கமல் நடித்து வந்தார். 


 



அப்படி நடிகர் கமல்ஹாசன் இரண்டாவது ஹீரோவாக நடித்த படம் தான் 'தங்கத்திலே வைரம்' . இப்படத்தின் மெயின் ஹீரோவாக சிவகுமார் நடிக்க அவரின் தம்பியாக கமல் நடித்திருந்தார். அண்ணன் பாடகர் என்றால் தம்பி டான்சர். அவர்களின் நாயகிகளாக ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா நடித்திருந்தனர்.


'தங்கத்திலே வைரம்' படத்தில் சிவகுமாரும் கமலும் இணைந்து ஒரு பாடலில் ஆடி இருப்பார்கள். கமல் சிறந்த டான்சர் என்பதால் அவரை மட்டும் அந்த பாடலில் ஆட வைக்கலாம் என்பது இயக்குநரின் கருத்தாக இருந்தது. ஆனால் டான்ஸ் மாஸ்டர், சிவகுமாரும் இணைந்து ஆடினால் பாடலுக்கு பொருத்தமாக இருக்கும் எனக் கூறியதால் நடிகர் சிவகுமாரும் ஒரு சில ஸ்டெப்ஸ் போட வேண்டி இருந்தது. அதனால் அண்ணன் சிவகுமாருக்கு ஏற்ற மாதிரி ஸ்டெப்ஸ் வைக்க சொல்லி டான்ஸ் மாஸ்டரிடம் தம்பி கமல் கூறியுள்ளார். அண்ணனுக்காக தன்னுடைய நடனத் திறமையை விட்டுக் கொடுத்துள்ளார் கமல். அப்போது சிவகுமார் போட்ட பெண் வேடம் தான் இந்த மடிசார் மாமி. 


இன்றும் ஒரு முழு நீள என்டர்டெயின்மென்ட் படம் பார்க்க ஆசைப்படுபவர்கள் கே. சொர்ணம் இயக்கத்தில் வெளியான 'தங்கத்திலே வைரம்' படத்தை பார்க்கலாம். அந்த அளவுக்கு பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவான ஒரு திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.