களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமமானவர் நடிகர் கமல்ஹாசன். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், நடன இயக்குநர் என கலைத்தாயின் அத்தனை படைப்புகளை கற்று தேர்ந்தவராய் , கமல்ஹாசன் கடந்து வந்த சினிமா பாதைகள் அசாத்தியமானது.பொதுவாகவே கமல் பதிவிடும் ட்வீட்டுகளை புரிந்துக்கொள்ள ஒரு அகராதி வேண்டும் என்பார்கள். அதே போலத்தான் இவர் நடித்த படங்களை காலம் கடந்து கொண்டாடியவர்களும் உண்டு. உலகநாயகன்  என கொண்டாடப்படும் கமல்ஹாசன் இன்று தனது 67 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் நண்பர்கள் , ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கமலின் இளைய மகளும் நடிகையுமான அக்‌ஷராஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் , தனது அப்பாவிற்கு நெகிழ்சியாக வாழ்த்து கூறியுள்ளார்.






 


அதில்” என் அன்பான பாபு (அப்பா) அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். உங்களால் வாழ்க்கையை பற்றியும் அதன் வெவ்வேறு கண்ணோட்டங்கள் குறித்தும் அறிந்துக்கொண்டேன். அதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாய் உணர்கிறேன்.உங்கள் பணியில் நீங்கள் கொண்டிருக்கும் ஈடுபாடும் , ஆர்வமும்தான், நான் தேர்ந்தெடுத்த துறையில் சிறப்பாக செயல்பட ஊக்கப்படுத்துகிறது.என்னோட ராக் ஸ்டார் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.






கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்னும் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனமே தயாரித்து வருகிறது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் நேற்றும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் கிளான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.அனிருத்தின் பின்னணி இசையில் மிரட்டலாக வெளியான அந்த காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விக்ரம் ஃபஸ்ட் கிளான்ஸ் வீடியோ வெளியான 16 மணி நேரத்தில் யூடியூப் பக்கத்தில் 42 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.