ஊரடங்கின்போது ரூ.2ஆயிரத்துக்கு வேலைக்குச் சென்றதாக நடிகையும், ஸ்ருதிஹாசனின் அம்மாவுமான சரிகா தெரிவித்துள்ளது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சிறு வயது முதலே சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை சரிகா. குறிப்பாக தென்னிந்திய மொழிகளைக் காட்டிலும் இந்தியில் நடிகையாக வலம் வந்தவர். சிறந்த நடிக்கான தேசிய விருதையும், ஹே ராம் படத்திற்கான ஆடை வடிவமைப்பாளருக்கு தேசிய விருதையும் வென்றவர். கமல்ஹாசனுடன் லின் இன் முறையில் வசித்து வந்த சரிகா, 1998ல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இந்த தம்பதி 2004ம் ஆண்டு வரை திருமண வாழ்க்கையில் பயணித்து பிரிந்தது. இந்த தம்பதிக்கு பிறந்தவர்களே ஸ்ருதிஹாசனும், அக்சராஹாசனும். கமல்ஹாசனின் முன்னாள் மனைவி, பிரபல நடிகை, இரண்டு நடிகைகளுக்கு தாய் என சரிகாவைச் சுற்றி ஒரு பிம்பம் இருந்தாலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் சரிகா சொன்ன பல தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பேசிய சரிகா, 60 வயதை கடந்து விட்டாலே நடிகைகளுக்கு எப்போதாவதே முக்கிய கதாபாத்திரம் கிடைக்கிறது. 6ஒ வயதை கடந்த நடிகைகள் மீது அம்மா வேடங்கள் திணிக்கப்படுகின்றன. இதுவும்கூட சினிமாவில் இருந்து நான் விலகி இருக்க இது ஒரு முக்கிய காரணம். நடிக்கலாம் என முடிவு செய்தபோது முதல் 3-4 படங்கள் என்னை விட மூன்று வயது குறைவான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.நல்ல ஸ்கிரிப்டுக்காகவே காத்திருக்கிறேன். நல்ல வாய்ப்பை நான் தவறவிடுவதும் இல்லை’’ என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்