உலக நாயகன் கமல் ஹாசன் நாளை தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி விக்ரம்  பட ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு படக்குழு சார்பாக கேக் வெட்டப்பட்டது. மேலும் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரும்  நேற்று வெளியிடப்பட்டது. கமலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 


அதேபோல்,  இயக்குநர் வெங்கட் பிரபுவும் நாளை தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக அவருக்கும்  பலர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.


இந்நிலையில் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர்  ஒருவர் தனது ட்விட்டர்  பக்கத்தில், “நாளை (நவம்பர் 7) பிறந்த நாள் கொண்டாடும் தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட சகலகலாவல்லவர் வெங்கட் பிரபு அவர்களுக்கு முன் கூட்டிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன் & நலமுடன்” என வெங்கட் பிரபுவை டேக் செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


 






அதற்கு வெங்கட் பிரபு, ஹீஹீஹீ நன்றி சார்! அவ்ளோ பில்டப்ப பார்த்ததும் தப்பா என்ன டேக் செஞ்சிட்டிங்க போலனு நினைச்சேன்!! அப்புறம்தான் உள்குத்து புரிஞ்சது!! என ரிப்ளை செய்திருக்கிறார். இந்த விவகாரம் தற்போது ட்விட்டரில் சர்ச்சையாகியுள்ளது. 


 






ரஜினி ரசிகர் கமலை கிண்டல் செய்வதற்காகவே சகலகலா வல்லவர் என எழுதி வெங்கட் பிரபுவை டேக் செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதை தெரிந்துகொண்டே வெங்கட் பிரபு இவ்வாறு ரிப்ளை செய்திருக்கிறார். யார் பன்முகத்திறமை கொண்ட சகலகலாவல்லவர் என திரையுலகுக்கு தெரியும் என்று ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர்.


 






அதுமட்டுமின்றி,#எச்சப்பய_வெங்கட்பிரபு என்ற ஹேஷ் டேக்கும் ட்விட்டரில் தற்போது வெளியாகியுள்ளது.  இன்னும் சில நாள்களில் மாநாடு திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இது வெங்கட் பிரபுவுக்கு தேவைதானா என்றும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.


இந்த விவகாரம் குறித்து வெங்கட் பிரபுவிடம்  ஏபிபி நாடு சார்பாக கேட்கப்பட்டபோது, “எனது ரிப்ளை தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. என்றைக்குமே கமலஹாசன்தான் சகலகலா வல்லவர்”என்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண