KH234


மணிரத்னம் இயக்க இருக்கும் KH234 படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணியளவில் வெளியாக இருக்கிறது. நாயகன் படத்தைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைய இருக்கிறார்கள் . ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் கமலுடன் நடிகர் துல்கர் சல்மான் இணைய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ஓகே காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது. துல்கர் சல்மான் தவிர்த்து இந்தப் படத்தில் கமலுடன்  நடிகை த்ரிஷாவும் நடிக்க இருக்கிறார். ஆயுத எழுத்து , பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா மூன்றாவது முறையாக நடித்துள்ளார். மேலும் கமலுடன் மன்மதன் அம்பு, தூங்காவனம் உள்ளிட்டப் படங்களில் த்ரிஷா நடித்துள்ளார்