விக்ரம்
கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விக்ரம் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ம் தேதி திரையரங்குகளில் களமிறங்குகிறது. விக்ரம் திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் இடையில் திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.
படத்தின் வெளியீட்டு தேதிக்கான இந்த நேரத்தில், படத்தின் அப்டேட் குறித்து அடுத்தடுத்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் கமல் எழுதி, பாடிய "பத்தல பத்தல" பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
மேலும் படிக்க : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!
‘ஜல்லிக்கட்டு’ படத்துக்காக தேசிய விருது பெற்ற கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார் மற்றும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜூன் 3ஆம் தேதி விக்ரம் படம் வெளியாகவுள்ளது.இதைத் தொடர்ந்து விக்ரமை சிபிஎப்சி உறுப்பினர்கள் தணிக்கை செய்துள்ளனர். இதனை திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கமல்ஹாசன் புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளார். விக்ரம் படம் 173 நிமிடங்கள் (2 மணி நேரம் 53 நிமிடங்கள்) ஓடும் என கூறப்படுகிறது.
புர்ஜ் கலிஃபாவில்
இந்நிலையில், ஜூன் 1ஆம் தேதி துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் படத்தின் ட்ரைலர் ஒளிபரப்பப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சினிமா பிரபஞ்சத்தின் மிக ஆடம்பரமான நிகழ்வுகளில் ஒன்றிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் - உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் ட்ரெய்லர் ஜூன் 1 ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு உலகின் மிக உயரமான திரையான புர்ஜ் கலிபாவில் வெளியிடப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்