Aalavandhan Re release:  2001ஆம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படம் கடந்த 2001ம் ஆண்டு ரிலீசானது. இதில் ரவீனா டாண்டன், அனுஹாசன், பாத்திமா பாபு என பலர் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த ஆளவந்தான் படத்தில், கமல்ஹாசன் ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்திருப்பார். பிரம்மிக்க  வைக்கும் அனிமேஷன் காட்சிகளும், கமல்ஹாசனின் அபாரமான நடிப்பும் இருந்தாலும் அந்தக் காலத்தில் ஆளவந்தான் படத்திற்கு பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருந்தது. 

 

இந்த நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ஆளவந்தான் படத்தை மீண்டும் டிஜிட்டல் வெர்ஷனில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியிருந்தார். அதன்படி கடந்த சில நாட்களாக ஆளவந்தான் படத்தின் ரீ-ரிலீஸ்கான டிஜிட்டல் பணிகள் நடைபெற்று வந்தன. படம் டிசம்பர் 8ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், கடந்த வாரம் படத்தின் கடவுள் பாதி, மிருகம் பாதி பாடலை அனிமேஷன் வெர்ஷனலில் படக்குழு வெளியிட்டது. 

 

அதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரின் தொடக்கத்தில், ஒரு உடம்பு இரண்டு தலை எனக் கூறும் பாம்பு டாட்டூவுடன் படம் தொடங்குகிறது. சைக்கோ வில்லத்தனத்தில் ஒரு கமலும், அவரை விரட்டிப் பிடிக்கும் ஹீரோவாக ஒரு கமலும் என புதிய ட்ரெய்லரிலும் ஆளவந்தான் படக் காட்சிகள் ஃப்ரெஷ்ஷாக தோற்றமளிக்கின்றன.

 





மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஆளவந்தான் படத்தை திரையில் காண கமல் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

 


 


முன்னதாக வெளியான ஆளவந்தான் படத்தின் கடவுள் பாதி மிருகம் பாதி பாடல் டிஜிட்டல் முறையில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. அதில், பழைய படத்தின் பாடலில் கடவுள் பாதி, மிருகம் பாதி... கலந்து செய்த கலவை நான் என்ற பாடலில் கமல் மட்டுமே நடித்து ரியாக்‌ஷன் கொடுக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். ஆனால் தற்போது டிஜிட்டல் முறையில் எடிட் செய்து வெளியிடப்பட்ட கடவுள் பாதி, மிருகம் பாதி பாடலின் லிரிக்ஸ் விடியோ காமிக்ஸ் மாடல் அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது. காமிக்ஸ் புத்தகங்களில் கலர் கலராக பாம்புகளும், புகைப்படங்களும் வருவது போல் அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள ட்ரெண்டுக்கு ஏற்ப டிஜிட்டல் முறையில் வெளியாகியுள்ள ஆளவந்தான் படத்தின் கடவுள் பாதி, மிருகம் பாதி பாடலை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.