காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு.
காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு 14 ஆயிரத்து 986 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரத்து 91 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. சம்பா சாகுபடி பணிக்காக ஆற்றில் இருந்து 13 ஆயிரத்து 2591 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில், 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, 1,439 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 1,717 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது புதிய பாசன வாய்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 89.21 அடியாக இருந்தது. அணைப்பகுதிகளில், 2 மில்லி மீட்டர் மழை பெய்தது. கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு காலை வினாடிக்கு, 1,477 கன அடி தண்ணீர் வந்தது.
ஆத்துப்பாளையம் அணை
கா. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அனைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 27 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.24 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு,
27 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலை பகுதிகளில் மழை பெய்து வருவதால், 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நிரம்பியுள்ளது. இதனால், இரண்டு பாசன கிளை வாய்க்காலில், தலா 10 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. அனைக்கு வினாடிக்கு, 20 கன அடி தண்ணீர் வந்தது. அணைப்பகுதியில்3 மில்லி மீட்டர் மழை பெய்தது.
பொன்னணி ஆறு அணை
கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு,7 கன அடி தண்ணீர் வந்தது. 51 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 28.17 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் 32 மில்லி மீட்டர் மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில் தொடரும் மழை.
கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தது.
அதிகபட்சமாக மாயனூரில் 32 மி மீ, மழை பெய்தது. கேரளாவில் வடபகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழக மற்றும் புதுச்சேரியில் வரும் 3 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் அதிகாலை வரை விடிய விடிய குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. காலை 11:30 மணி முதல் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது.
மழை நிலவரம்.
கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு கரூர் 26, அரவக்குறிச்சி 15, அணைப்பாளையம் 6 கா. பரமத்தி 11.2, குளித்தலை 12, கிருஷ்ணராயபுரம் 21, மாயனூர் 32, கடவூர் 30, பாலவிடுதி 9.3மயிலம்பட்டி 5.2 அதிக அளவுகளில் மழை பெய்தது. மாவட்ட முழுவதும் சராசரியாக 13.98 மில்லிமீட்டர் மழை பெய்தது.