வெற்றி மாறன் படத்தில் நடிகர் விஜயும் கமலும் இணையுள்ளனர் என்று தகவல் வெளியாகிவுள்ளது. நாளை பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது.அதில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினி மற்றும் கமல் பங்கேற்கவுள்ளனர். இதனால் ட்விட்டரில், கமல் ஹாசன் ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த ஹாஷ்டாகில், பலரும் பல பழைய வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். உலக நாயகன் என்ற பெயருக்கு ஏற்ப, அவரின் திறமைகளை போற்றி புகழ்ந்து வருகின்றனர். நடிப்பு மட்டுமல்லாமல் சினிமா துறைக்கு தேவையான அத்தனை அறிவையும் பெற்றவர் கமல் என்றும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வரிசையில், இயக்குநர் கெளதம் மேனன், “உண்மையிலே நான் தான் ஒர்ஜினல் ஃபேன் பாய், அதுதான் உண்மை. இந்த இடத்துக்கு போட்டி போட நிறைய பேர் வருவாங்க, சண்டையும் போடுவாங்க. சண்ட-னு வந்த சட்ட கிளியதான் செய்யும். நான் ரெடி அதற்கு” என கமல் ஹாசனை பார்த்து பேசிய வீடியோவும் வைரலாகிறது. இன்று ஆசிரியர் நாள் கொண்டாடப்படும் நிலையில், நடிகர் கமலும் ஒரு வகையில் குருதான், வாழ்க்கைக்கு தேவையான பாடத்தை கற்றுக்கொடுத்த குருவுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளனர்.
இதுபோல், வெற்றி படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் நடிகர் விஜயை வைத்து படம் இயக்கவுள்ளார். இந்த படத்தை நடிகர் கமலின் ராஜ் கமல் ஃப்லிம்ஸ் தயாரிக்கவுள்ளது என தகவல் வந்துள்ளது. இதைக்குறித்து அதிகாரபூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனாலும் இந்த சூப்பரானதகவலை மறுக்கவே முடியாது அல்லவா!
இந்தியன் 2 படப்பும் துவங்கியுள்ள நிலையில் பயங்கர பிசியாகி விட்டார் நடிகர் கமல். இதனால், வழக்கமாக இவர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்பாரா என பல கேள்விகள் எழும்பி வருகிறது.