Just In





Indian 3 - Kajal Aggarwal: கவனமீர்த்த காஜல் அகர்வால்.. திரையரங்கில் மிரளவைத்த இந்தியன் 3 முன்னோட்டம்!
Indian 2 - Kajal Aggarwal: இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டுள்ளது. இதில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளன.

இந்தியன் 2
ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 (Indian 2) திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் ஹாங்காங் தப்பிச் சென்ற கமலின் சேனாபதி கதாபாத்திரம் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி வருவதில் இருந்து தொடங்குகிறது இந்தியன் 2 படம். கமல் தவிர்த்து காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத், பாபி சிம்ஹா, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரராக கலக்கும் காஜல் அகர்வால்
இந்தியன் 2 படத்துக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படத்தில் நடித்த மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்கள் பற்றி ரசிகர்களுக்கு ஒரு ஐடியா கிடைத்தது. ஆனால் கடைசிவரை காஜல் அகர்வால் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது ரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. தற்போது இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகள் முடிந்து விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில் காஜல் அகர்வால் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்தியன் 2 படத்தைப் பொறுத்தவரை காஜல் அகர்வாலின் காட்சிகள் குறைவாக இருக்கின்றன என்றாலும் படத்தின் இறுதியில் வரும் மூன்றாம் பாகத்திற்கான முன்னோட்டத்தில் நடிகை காஜல் அகர்வாலின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதல் பாகத்தில் சேனபதியின் மனைவியாக சுகன்யா நடித்திருந்த நிலையில், இந்தப் படத்தில் காஜல் அகர்வால் அவருக்கு பதிலாக நடித்துள்ளார். காஜல் அகர்வால் நடித்துள்ள காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். பலர் காஜல் அகர்வாலை பார்ப்பதற்காக மட்டுமே இந்தியன் 3ஆம் பாகத்தை பார்க்கப் போவதாக கூறி வருகிறார்கள்.
சேனாபதி மற்றும் அவரது மனைவி தீவிர சுதந்திரப் போராட்ட வீரர்களாக இருந்த காட்சிகள் மூன்றாம் பாகத்தில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களுக்கு அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.