இந்தியன் 2


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படியான நிலையில் இப்படத்தின் முதல் பாடல் பாரா நாளை மே 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு இப்பாடலின் ஒரு சிறு ப்ரோமோ ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இப்பாடல் இந்தியன் முதல் பாகத்தில் கப்பலேறி போயாச்சு பாடலின் சாயலில் அமைந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது