'விக்ரம்' என்ற ஆக்ஷன் என்டர்டெய்னர் படத்தில் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கமல்ஹாசன் நீண்ட நாட்களுக்கு பிறகு பவர் பேக்கான நடிப்பை வெளிப்படுத்தினார். இவரது நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அன்பளிப்பாக இந்த திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூல் செய்துள்ளது.
இப்படத்தின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில், கமல்ஹாசன் தனது இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்ஸஸ் காரைப் பரிசாக வழங்கியதுடன், படத்தில் பணியாற்றிய தலா 13 உதவி இயக்குநர்களுக்கு டிவிஎஸ் அப்பாசி ஆர்டிஆர் 160 பைக்களை பரிசாக வழங்கினார். இதுதொடர்பான புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் ஒரு கலக்கு கலக்கியது.
இந்தநிலையில், இன்று விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார் நடிகர் கமல். இது குறித்து பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம் இது. நன்றி அண்ணா என பதிவிட்டுள்ளார்.
விக்ரம் படத்தின் கடைசி மூன்றே நிமிடங்களில் தோன்றி திரையரங்குகளை அதிரவைத்த நடிகர் சூர்யா, லோகேஷ் கனகராஜ் வருங்காலத்தில் எடுக்கும் விக்ரம் 3 மற்றும் கைதி 2 போன்ற படங்களுக்கு கீயாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு சூர்யாவின் கதாபாத்திரம் முக்கிய காரணம் என்பதால் தற்போது நடிகர் கமல்ஹாசன் சூர்யாவிற்கு வாட்சை பரிசளித்ததாக கூறப்படுகிறது.
இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் என்னவொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கமல் தான் கட்டிருந்த ரோலக்ஸ் வாட்சையே கழட்டி நடிகர் சூர்யாவின் கைகளுக்கு அணிவித்தார். தற்போது அதற்கான புகைப்படங்களுக்கு இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
சூர்யா முதலில் நடிகர் கமல்ஹாசனை தன் வீட்டிற்கு கையை பிடித்து அழைத்து வந்தபோது கமலின் இடதுப்புற கைகளில் அந்த ரோலக்ஸ் வாட்ச் இடம்பெற்று இருந்தது. அதன்பிறகே கமல், சூர்யாவிற்கு அதை கழட்டி தன் கைகளால் மாட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்