உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கத்தில் கடந்த 2004 ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் விருமாண்டி. இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது இளையராஜாவின் இசை. விருமாண்டி படத்தில் கமல்ஹாசனின் நடிப்பை தொடர்ந்து பசுபதி, நெப்போலியன் என பலரது நடிப்புகள் பாராட்டுகளை பெற்றது. 


கடந்த ஜனவரி 14 ம் தேதி பொங்கல் பண்டிகை நாளென்று விருமாண்டி படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவு செய்தது. கிட்டத்தட்ட 18 வருடங்கள் கடந்தாலும் விருமாண்டி படம்தான் தற்போது உள்ள பல இளைய தலைமுறை இயக்குநர்களுக்கு முன் உதாரணமாக இருந்தாக பலரும் அவர்கள் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தனர். 



அப்படி இருக்கையில், நடிகர் நெப்போலியன் தனியார் யூடியூப் சேனலில் விருமாண்டி திரைப்படம் 18 ஆண்டுகள் நிறைவு செய்ததை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனிடம் அத்திரைப்படத்தின் ஒரு போஸ்டரை காண்பித்து இந்த ஐடியா உங்களுக்கு எப்படி வந்துச்சு என்று கேள்வி கேட்டார். அந்த போஸ்டரில் முக்கடவுள் பிரம்மா, சிவன், திருமால் போன்று கமல், பசுபதி, நெப்போலியன் ஆகியோர் மூன்று முகமாக காட்சியளித்தனர்.


அப்பொழுது விளக்கமளித்த கமல்ஹாசன், அந்த டிசைன் குமார் பண்ணது. அவர் என்கூட விக்ரம் படத்தில் இருந்து வேலை செய்யுறாரு. நான் இந்த மாதிரி மூணு பேரு போட்டோ வச்சு டிசைன் பண்ணனும்ன்னு சொன்னேன். நம்ம மூணு பேரு கிட்டத்தட்ட வேற வேற கலர் எல்லாரையும் ஒன்னு சேர்த்தார். அந்த டிசைன்ல மீசைல இருந்து எல்லாத்தையும் சரியா செதுக்கி அழகா டிசைன் பண்ணிருந்தார். 


எல்லாரும் சரிசமமாக இருக்கனும்ன்னு நினைச்சுதான் எடிட் பண்ண சொன்னேன். என்கிட்ட நிறைய பேர் கேட்டாங்க நீங்க தான ஹீரோ உங்க போட்டோ மட்டும் வச்சா போதாதா.எதுக்கு அந்த ரெண்டு பேருன்னு. என்ன பொறுத்தவரையும் என் கதைதான் எல்லாம், அது வெளியே போதும் என்று பதிலளித்தார். 


 அந்த உரையாடலின்போது நடிகர் நெப்போலியன், பட்டிமன்ற பேச்சாளர் திருஞானசம்பந்தம் ஆகியோர் தங்களது கேள்விகளை கமல்ஹாசனிடம் முன்வைத்தனர். அதற்கு அவர் பொறுமையாக தன் மனதில் தோன்றிய எண்ணங்களை புன்னகை மாறா முகத்துடன் வெளிபடுத்தினார். தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண