Pesum Padam: கமல்ஹாசன் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... ‘வேட்டையாடு விளையாடு’ வரிசையில் ரீ ரிலீசாகும் ‘பேசும் படம்’!

படத்தில் எந்த கேரக்டருக்கும் பெயர் வைக்காமல் கச்சிதமாக கதையை நகர்த்தி இருப்பார் இயக்குநர் சீனிவாச ராவ். மிடில் கிளாஸ் வாழ்க்கையை சேர்ந்த ஹீரோ விடுதியில் தங்கி தனக்கான வேலையை தேடி கொண்டிருப்பார்.

Continues below advertisement

Pesumpadamகமல்ஹாசன், அமலா நடிப்பில் 1987ஆம் ஆண்டு ரிலீசான பேசும்படம் விரைவில் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. 

Continues below advertisement

ரசிகர்கள் கொண்டாடும் பழைய படங்கள் கடந்த சில மாதங்களாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு படம் அண்மையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருந்த பேசும் படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

1987ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் ஆண்டு திரைக்கு வந்த பேசும் படத்தில் கமல், அமலா, டினு ஆனந்த், சமீர் கக்கார், பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.வி. ரெட்டியிடம் உதவி இயக்குநராக இருந்த சீனிவாச ராவ், வசனமே இல்லாமல் ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என சிந்தித்தார். அதன் விளைவாக திரைக்கு வந்தது தான் பேசும் படம். வசனம் இல்லாத படத்துக்கான கதையை இரண்டே வாரங்களில் எழுதி முடித்தார் இயக்குநர் சீனிவாச ராவ். பெங்களூருவில் படப்பிடிப்பு முடிந்தது. 

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் கன்னடத்தில் புஷ்ப விமானா, தெலுங்கில் புஷ்பக விமானம், இந்தியில் புஷ்பக், தமிழில் பேசும் படம் என பல தலைப்புகள் படம் ரிலீசானது. முதல்முயற்சியாக வசனம் இல்லாத இந்தப் படம் நல்ல வசூலை வாரியது. பெங்களூருவில் 5 மாதங்கள் வரை திரையரங்குகளில் ஓடியது. 

படத்தில் எந்த கேரக்டருக்கும் பெயர் வைக்காமல் கச்சிதமாக கதையை நகர்த்தி இருப்பார் இயக்குநர் சீனிவாச ராவ். மிடில் கிளாஸ் வாழ்க்கையை சேர்ந்த ஹீரோ விடுதியில் தங்கி தனக்கான வேலையை தேடி கொண்டிருப்பார். அப்பொழுது சாலையில் விழுந்து கிடக்கும் ஒருவரை பார்த்த ஹீரோவுக்கு அந்த நபரின் ஆடையில் நட்சத்திர விடுதியின் சாவி இருப்பது தெரிய வருகிறது. உடனே அந்த நபரை விடுதியில் தனது அறையில் கட்டிப்போட்டுவிட்டு, பணக்காரனாக அந்த நபராக நட்சத்திர ஹோட்டலுக்கு செல்கிறார் ஹீரோ. அங்கு ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் அவருக்கு ஒரு காதலும் கிடைக்கிறது. இறுதியில் அவரின் காதல், அந்த ஆடம்பர வாழ்க்கை என்ன ஆகிறது என்பது கதையாக இருக்கும். 

படத்தில் வசனங்கள் எதுவும் இல்லாததால் நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. ஒவ்வொருவரின் உடல்மொழி, முகபாவம், நடிப்பு என அனைவற்றிலும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. கமல் நடிப்பில் அசத்தி இருப்பார். அமலா நடனத்தை பயின்றவர் என்பதால் முகபாவங்களில் உணர்ச்சிகளை தானாகவே வெளிப்படுத்தி இருப்பார். கமலிடம் பார்வையிலேயே பேசிக் கொள்ளும் அமலா ரசிகர்களை கண்ணிமைக்காமல் ரசிக்க வைத்திருப்பார். எனினும், கமல் மற்றும் அமலாவின் காதல் கதை சோகத்தில் முடிவது ரசிகர்களையும் சோகமடைய வைத்திருக்கும். 

வசனம் இல்லாத படத்துக்கு ஏற்றவாறு பின்னணி இசையில் மாயம் செய்திருப்பார். எல்.வைத்தியநாதன். இப்படி வித்தியாசமான கோணலில் எடுக்கப்பட்ட பேசும் படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola