KH234 Title Announcement: நடிகர் கமல்ஹாசனின் 234 (KH234) படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால், மிகப்பெரிய ஹிட்டாகி ரூ.400 கோடி வரை இப்படம் வசூலில் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.


இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், நேற்று இந்தியன் படத்தின் அறிமுக வீடியோ வெளியானது. இந்தியன் 2 படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 3 படத்திற்கான ஷூட்டிங்கிலும் கமல் பிசியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 


இதைத் தொடர்ந்து இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவராக கருதப்படும் ஹெச்.வினோத் உடன் இணைந்துள்ள கமல்  KH233 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலானது.


அதேநேரம் கமல்ஹாசனின் எவர்க்ரீன் ஹிட் கூட்டணி இயக்குநரான மணிரத்னத்துடன் மீண்டும் கமல் கூட்டணியில் இணைந்தார். கமல் ஹாசனின் KH234 படத்தை மணிரத்னம் இயக்குவார் என்ற அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல், ரெட் ஜெயண்ட் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில் கமலின் நடிப்பில் உருவாகும் KH234 படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 






நடிகர் கமல்ஹாசன் நாளை மறுநாள் (நவ.07) தன் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், இதனை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது.


ஏற்கெனவே 1987ம் ஆண்டு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் வெளிவந்த நாயகன் படம் கிளாசிக் ஹிட் கொடுத்தது. இந்த சூழலில் மீண்டும் இரு ஜாம்பவான்களும் இணைய உள்ளதால் KH234 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. 


 


மேலும் படிக்க: Entertainment Headlines: பிரதீப் ஆண்டனிக்கு வலுக்கும் ஆதரவு.. விஜய்யின் அரசியல் பற்றி வெற்றிமாறன்.. சினிமா ரவுண்ட்-அப்!


Vetrimaaran on Vijay: விஜய் அரசியலுக்கு வர தகுதி இருக்கா... வெற்றிமாறன் அளித்த பளிச் பதில்!